December 6, 2021 தண்டோரா குழு
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக பந்தைய டிராக்கை சுற்றி வரும் வகையிலான மினி காரினை கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள்காட்சி படுத்தியுள்ளனர்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கே.ஜி எஞ்சினியரிங் தனியார் கல்லூரியில் பொறியியல் பயிலும் மாணவ மாணவிகள் aws deepracer எனப்படும் சிறிய அளவிலான பந்தயக்கார்களில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை புகுத்தி தன்னிச்சையாக செயல்படும் வகையில் உருவாக்கியுள்ளனர்.
இந்த கார் பந்தயத்தில் அமைக்கபட்டுள்ள ஓடு தளத்தில் தன்னிச்சையாக செயல்படும் விதமாக அதாவது வளைவு மற்றும் நேர் பாதைகளில் தன்னிச்சையாக ரிமோட் இயக்கமில்லாமல் செல்லும் வகையில் செய்ற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை புகுத்தியுள்ளனர்.
இது குறித்து பேசிய கல்லூரியின் தாளாளர் அசோக் பக்தவச்சலம்,
மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை புகுத்தி தன்னிச்சையாக செல்லும் வகையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.தமிழகத்தில் இதுவே முதல் முறை எனத் தெரிவித்தார்.மேலும் மாணவர்கள் புதிய புதிய தொழில்நுட்பங்களை செயற்கை நுண்ணறிவு துறையில் உருவாக்கும் நிலையில் கார் பந்தையம் மட்டுமல்லாது பல்வேரு துறைகளில் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல உதவும் என தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு பொறியியல் மாணவி திரிஷா கூறும்போது,
கார் பந்தைய டிராக்கில் கார் தன்னிச்சையாக சுற்றி வரும் வகையில் தொழில்நுட்பத்தை கோடிங் மூலமாக புகுத்தியுள்ளதாகவும் கடந்த 6 மாதங்களாக இந்த பயிற்சியை மேற்கொண்டு தற்போது அந்த மினி காரினை காட்சிபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கபடும் கார்களை பந்தையங்களில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில் அமேரிக்கவை சேர்ந்த பிராசஸ்மைனர் நிறுவனத்தின் அறிவியல் துறை இயக்குனர் சித்தரஞ்சன் மற்றும் அமேசான் நிருவனத்தின் aws அகாடமியின் பயிற்சியாளர் விஷ்ரம் தட்டி காணொளி வாயிலாக கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினர். இதில் செயற்கை நுண்ணறிவு துறை பேராசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.