December 16, 2016 indianexpress.com
வங்காளதேசத்தின் 44வது சுதந்திர தினத்தை அந்நாட்டு மக்கள் வெள்ளிக்கிழமை(டிசம்பர் 16) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடினார்கள். இவ்விழாவில் இந்திய மற்றும் ரஷ்யாவை சேர்ந்த 29 ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
பாகிஸ்தானின் பிடியில் இருந்த வங்காள தேசம் 1971ம் ஆண்டு இந்திய மற்றும் ரஷ்யா ராணுவத்தின் உதவியுடன் பாகிஸ்தானை எதிர்த்து போர் புரிந்து வெற்றி பெற்றது. வங்காளதேசம் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை அடைந்து தற்போது(டிசம்பர் 16) 44 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த சுதந்திர நாளை அந்நாட்டு மக்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.
சுதந்திர நாளை கொண்டாடம் விதமாக வெள்ளிக்கிழமை(டிசம்பர் 16) நடந்த நிகழ்ச்சியில், சவார் என்னும் இடத்தில் உள்ள தேசிய நினைவிடத்தில் வங்காளதேசத்தின் ஜனாதிபதி அப்துல் ஹமிட் மற்றும் பிரதமர் ஷேக் ஹசினா 1971ல் நடந்த போரில் இறந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், தேசிய அணிவகுப்பு அரங்கத்தில் நடந்த ஆயுத படைகளின் அணிவகுப்புக்கு ஜனாதிபதி ஹமித் தலைமை ஏற்றார். வங்கதேசத்தின் தலைநகரான டாக்கா மற்றும் அந்நாட்டின் அணைத்து பகுதிகளிலும் மக்கள் ஒலி ஏற்றி தங்களது மகிழ்சியை வெளிப்படுத்தினர்.
முன்னதாக வியாழக்கிழமை இரவு பிரதமர் மாளிகையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் வங்காளதேசத்தின் விடுதலைக்காக போரில் ஈடுப்பட்ட இந்திய மற்றும் ரஷ்யாவை சேர்ந்த 29 ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அந்த விழாவில் வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா பேசுகையில், “உங்களுடைய பங்களிப்பை வங்காள தேசம் எப்போதும் மறக்காது” என்றார்.