• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காஷ்மீர் நிலையில்தான் தமிழகம் உள்ளது- கோவையில் ஹெச் ராஜா பேட்டி !

December 12, 2021 தண்டோரா குழு

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

திமுக எல்லா துறைகளில் தோற்றுவிட்டது எனவும் திமுகவிற்கு வாக்கு அளித்தவர்கள் ஏன் வாக்களித்தோம் என்ற நிலைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். மழை வெள்ளத்தை சமாளிக்க முடியமால் தோற்ற அரசு திமுக அரசு என விமர்சித்த அவர் மக்களை திசை திருப்பும் நோக்கில் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசின் உண்மைகளை வெளிக்கொண்டு வருபவர்களை கைது செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். திமுக ஆட்சியில் 150 இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் பட்டா நிலத்தில் இருக்க கூடிய கோவிலும் இடிக்கப்பட்டுள்ளதாகவும், காஷ்மீர் போன்று தமிழ்நாடு உள்ளது எனவும் கூறினார்.

பிபின் ராவத், மோடி, ஆர்.எஸ்.எஸ் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பேசியவர்களின் ஆதாரங்கள் வைத்திருப்பதாக கூறிய அவர், அத்தகைய தேச விரோதிகளை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார். காவல்துறை ஏவல்துறையாக உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரியாக சொல்லியிருக்கிறார் என்றார். ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் சொத்து விபரங்களை தலைமை செயலாளர் கேட்டிருப்பது வரவேற்ககூடியது என்றார்.

விமான விபத்து குறித்து கருப்பு பெட்டி ஆய்வுக்கு பிறகு தெரியவரும் என்றும் அதற்கு முன்பு சர்ச்சை கூடாது என கூறினார். பாஜகவினர் கூடினால் கொரோனா பரப்புவதாக வழக்கு பதியப்படுவதாகவும் முதலமைச்சர் கூடும் நிகழ்வுகளில் கொரோனா பரவுவது இல்லையா எனவும் கேள்வி எழுப்பிய அவர் கிறிஸ்மஸ் அன்று வெளிநபர்கள் தேவாலயங்களுக்கு அனுமதியில்லை என்று கூறுவதற்கு இந்த அரசுக்கு முதுகெலும்பு உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

தமிழக நிதி அமைச்சர் வேலை பார்த்த இடங்கள் விளங்கியதில்லை என்கிறார்கள் எனக்கூறிய அவர், மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே மாநிலத்தில் நடைபெறுவதாகவும், திமுக அளித்த வாக்குறுதி திட்டங்களை ஒன்றையும் செயல் படுத்துவது இல்லை என கூறினார்.

மேலும் படிக்க