December 13, 2021 தண்டோரா குழு
தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பெரியார் மணி என்பவர் நைட்டி அணிந்த படி வயிற்றில் பஞ்சை வைத்து கட்டி கர்ப்பிணி பெண் போன்று வேடமணிந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது,
தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கர்ப்பிணி பெண்களுக்கு முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் மகப்பேறு திட்டம் மூலம் நிதி உதவியும் அதேபோல் ஏழை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் நிதியுதவியும் ஊட்டச்சத்துக்களும் பல மாதங்களாக தொடர்ந்து வழங்கப்படும் அதேபோல பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் பாதிப்படைகின்றனர் எனவே உடனடியாக இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்று கூறி அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.