• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் துரத்திப் பிடிக்க முயன்ற காவல் ஆய்வாளரை தள்ளிவிட்ட கஞ்சா வியாபாரி

December 14, 2021 தண்டோரா குழு

கோவையில் துரத்திப் பிடிக்க முயன்ற காவல் ஆய்வாளரை கஞ்சா வியாபாரி தள்ளிவிட்டதால் கை மற்றும் கால் எலும்புகளில் முறிவு ஏற்பட்டு காவல் ஆய்வாளர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் கண்ணா. சிவானந்தா காலனியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக வந்த தகவலையடுத்து ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா மற்றும் உதவி ஆய்வாளர் தலைமை காவலர் சுகந்த ராஜன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அண்ணாநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருப்பதை பார்த்து விசாரிக்க அருகில் சென்று உள்ளனர். போலீசார் வருவதை பார்த்து அந்த வாலிபர் தப்பியோட, காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா அந்த வாலிபரை துரத்தி பிடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வாலிபர் காவல் ஆய்வாளரை தள்ளிவிட ஆய்வாளர் கீழே விழுந்த்தில் கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனிடையே உடனிருந்த தலைமைக் காவலர் சுகந்த ராஜன் அந்த வாலிபரை துரத்திப் பிடித்து விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்த சூரியபிரகாஷ் என்பதும் முன்னதாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. இதனுடைய படுகாயமடைந்த காவல் ஆய்வாளரை அமைத்த சக காவலர்கள் சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ரத்தினபுரி காவல்துறையினர் சூரிய பிரகாஷ் மீது அரசு ஊழியரை அவரது பணியை செய்யவிடாமல் தடுத்து தாக்குதல் நடத்துல் (353) சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க