December 14, 2021 தண்டோரா குழு
அலென் கோயம்புத்தூர், ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய மற்றும் சர்வதேச ஒலிம்பியாட்ஸ், ஐஐடி – ஜெஇஇ மற்றும் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கு வகுப்பறை மற்றும் டிஜிட்டல் முறையிலான கல்வியையும் ஆலோசனைகளையும் வழங்குகிறது.
டிஜிட்டல் கல்விகளுக்கானஅதிநவீன கட்டமைப்புகளுடன் கல்வி உதவி திட்டங்களையும் வகுப்பு தேர்வுகள், நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறது. மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியான விடுதி வசதிகளையும் அளித்துள்ளது. வகுப்புகள் வரும் 2022 ஏப்ரல் 7ம் தேதி முதல் துவங்குகிறது.
ரெசிடென்சி ஓட்டலில் நடந்த துவக்க விழாவில், அலென் கேரியர் இன்ஸ்டியூட் துணைத்தலைவர் பங்கஜ் அகர்வால், தென்னிந்திய தலைவர் மகேஷ் யாதவ், ஆதித்யா குழுமம் வித்யாஸ்ரம் பள்ளி நிறுவன இயக்குனர் சி.ஆனந்தனே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பங்கஜ் அகர்வால் பேசுகையில்,
இந்தியாவில், தற்போது நடப்பில் உள்ள 10 ஆண்டுகளுக்குள் 2.5 கோடி பேருக்கு கல்வி அளிக்க வேண்டும் என்ற எங்களது தொலைநோக்கு இலக்கில், கோவை மிக முக்கிய பங்கு வகிக்கும்,” என்றார்.
நிறுவனர் சி. ஆனந்தனே பேசுகையில்,
கோட்டா ராஜஸ்தானில் உள்ள முன்னணி ஆலோசகர்களின் யோசனையின்படி இந்த வகுப்புகள், தமிழ்நாட்டில் உள்ள கோவை நகரில் இன்று டிசம்பர் 14, 2021 முதல் துவங்கப்படுகிறது. கோவையில் காந்திபுரம், 35, டாடாபாத் 7 வது வீதி முகவரியில் இது அமைந்துள்ளது.
தென்னிந்திய அலென் மையத்தின் கல்வி பிரிவு தலைவர் மகேஷ் யாதவ் பேசுகையில்,
” நிலையான, தரமான அனுபவம் கொண்ட ஆசிரியர் குழு, 33 ஆண்டுகளாக அலென் கோட்டாவில் உள்ள அதே நம்பகத்தன்மை, அர்ப்பணிப்பு உணர்வோடு இங்கும் பணியாற்றுவர்,” என்றார்.
கடந்த 30 ஆண்டுகளாக அலென் கேரியர் நிறுவனம், அகில இந்திய அளவில் 17 முறை அகில இந்திய அளவில் ஐஐடி – ஜெஇஇ மற்றும் நீட் தேர்வு எழுதியோருக்கு முதல் ரேங்க் பெற்றுக் கொடுத்துள்ளது. நமது தாய் நாட்டை பெருமை மிக்கதாக மாற்றும் கோவையில் உள்ள மாணவர்கள் சமுதாயத்திற்கு அலென் கேரியர் இன்ஸ்டியூட் ஒரு பரிசாகும்.