December 15, 2021 தண்டோரா குழு
15 ஆண்டுகளாக திருப்பூரில் இயங்கிவரும் லோட்டஸ் கண் மருத்துவமனை, மக்களுக்கு தரமான கண் சிகிச்சையை அளித்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்று தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது. அனைத்துவித கண் நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்காக இம்மருத்துவமனையில் அனுபமிக்க கண் மருத்துவர்கள் மற்றும் கண் பரிசோதகர்கள் உள்ளனர்.
உலகின் பல்வேறு பகுதிகளில் கண் சிகிச்சையில் அறிமுகப்படுத்தப்படும் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை உடனுக்குடன் நம் பகுதியில் அறிமுகம் செய்வதில் முன்னோடியாக லோட்டஸ் கண் மருத்துவமனை திகழ்ந்து வருகிறது. கடந்த வருடங்களில் திருப்பூரில் இம்மருத்துவமனையில் சுமார் 6 லட்சம் பேருக்கு கண் பரிசோதனையும் 50 ஆயிரம் பேருக்கு மேல் கண் அறுவை சிகிச்சையும் வழங்கியுள்ளது.
லோட்டஸ் கண் மருத்துவமனை, தற்பொழுது உள்ள இடத்திலிருந்து பல்லடம் ரோட்டில் திருப்பூரில் சந்தைப்பேட்டை பஸ் நிலையம் அருகில் ஓர் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படுகிறது.
லோட்டஸ் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சுந்தரமூர்த்தி பேசுகையில்,
“மக்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கேற்ப இந்த புதிய மருத்துவமனையில் சிறப்பான கட்டமைப்பும், நவீன தொழில் நுட்பம் கொண்ட உபகரணங்களுடன் கண்புரை அறுவை சிகிச்சை, பார்வை குறைபாடு, சர்க்கரை நோயினால் ஏற்படும் கண் பார்வை குறைபாடுகள், குளுகோமா போன்றவற்றிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும்” என்றார்
இந்த அதி நவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையை இன்று காலை கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் திறந்து வைத்தார். மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சுந்தரமூர்த்தி மற்றும் முதன்மை தலைமை அதிகாரி கே.எஸ்.ராமலிங்கம் சிறப்புரை ஆற்றினர். இந்த விழாவில் நகரின் பல்வேறு மருத்துவர்களும், திருப்பூரைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
துவக்க விழா சலுகையாக டிசம்பர் 31-ம் தேதிவரை அனைத்துப் பொது மக்களுக்கும் கண் பரிசோதனை மற்றும் மருத்துவர் ஆலோசனை இலவசமாக செய்யப்படும். மேலும் விபரங்கள் பெற தொடர்பு கொள்ளவும் : தொலைபேசி எண் : 7708 111 017.