December 16, 2021 தண்டோரா குழு
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டுவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
கோவையை பொறுத்தவரை 500க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகள் மூடப்பட்டன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.இதனால் செக் கிளியரன்ஸ், ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்புதல் உள்ளிட்ட பணிகள் பாதிப்படைந்துள்ளன.
இதனிடையே கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கி முன்பு 500க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கோவையில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை பணப் பரிமாற்றம் பாதிக்கப்படும் என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.