December 17, 2021 தண்டோரா குழு
நெல் விற்பனை செய்ய ஏதுவாக இணையதளம் வசதிவிவசாயிகள் பயன்படுத்தி கொள்ள ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல் விற்பனை செய்ய ஏதுவாக தங்களது பெயர், ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து நெல் கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் மேற்கண்ட இணையதளத்தில் எதிர்வரும் சம்பா பருவம் 2022-க்கு வரும் 16ம் தேதி முதல் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும். இந்த இணையவழி பதிவு திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள முதுநிலை மண்டல மேலாளர் அலுவலத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.