• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவை கோவை மக்கள் ஏமாற்றி விட்டீர்கள் – உதயநிதி ஸ்டாலின்

December 26, 2021

கோவை மாவட்டத்தில் திமுக கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாமை திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேனி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

கோவை காளப்பட்டி பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் இளம்பெண்கள் என மொத்தம் 1000 புதிய உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர். இதில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் இம்முகாமினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,

ஒரு கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டது திமுக என்றும் இதுவரை 24 லட்சம் இளைஞர்களை சேர்த்துள்ளோம் எனவும் கூறினார். மேலும்முதல்வர் சென்னைக்கு அடுத்த படியாக கோவையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

பின்னர் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்,

கோவையில் இளைஞர்கள் இளம்பெண்களை சேர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
கோவை மக்களுக்கு குசும்பு மட்டுமல்லாமல் ஏமாற்றமும் அளிப்பவர்கள் என கூறிய அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில்திமுகவை கோவை மக்கள் ஏமாற்றி விட்டீர்கள்.கொரோனா வில் இருந்து தமிழகத்தை காப்பாற்றி உள்ளோம் எனவும் இனிவரும் நோயையும் எதிர்கொள்வோம்.

பெட்ரோல் டீசல் விலை ஆவின் பால் விலையை முதல்வர் குறைத்துள்ளோம். பெண்களுக்கு நகர பேருந்தில் இலவச பயணம் ஆகியவற்றை ஏற்படுத்தி தந்துள்ளோம்.எனக்கு தொகுதிக்கு 10,000 பேர் கழகத்தில் சேர்க்க வேண்டும் என இழக்கு தரப்பட்டு 24 லட்சம் பேரை இனைந்துள்ளதாகவும்திமுக செயலாளர்கள் பொறுப்பாளர்கள் சேர்ந்து 2 கோடி பேரை திமுக வில் சேர்க்க வேண்டும் என்ற இழக்கு தரப்பட்டுள்ளது. அதனை முடிக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நான் அமைச்சர், துணை முதல்வர் பொறுப்பிற்கு ஆசை படாதவன் எனவும் எங்களை
மீண்டும் உள்ளாட்சி தேர்தலில் ஏமாற்றி விடாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.

பின்னர் புதிய உறுப்பினர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். இந்நிகழ்வில் திமுக கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் செயலாளர்கள் 100க்கும் மேற்ப்பட்ட திமுகவினர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க