• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நடைபெற்ற 7 வது ஆண்டு புறா பந்தய போட்டி

December 28, 2021 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற 7 வது ஆண்டு, புறா பந்தய போட்டி, வெற்றி பெற்ற அனைத்து புறா வளர்ப்பாளர்களுக்கும், கோவை ஆவாரம்பாளையம் பகுதியில், இன்று பரிசுகள் வழங்கபட்டது.

கோவை மாவட்டத்தில் ஆண்டு தொறும், மாவட்ட அளவிலான புறா பந்தய பொட்டிகளை கோவை பீஜீயன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடத்தி வருகின்றனர், தொடர்ந்து 7 வது ஆண்டாக இந்த ஆண்டும் போட்டிகள் நடைபெற்றது, இதில் கோவை மாவட்டத்தை சுற்யுள்ள 30 க்கும் மேற்பட்ட பகுதிகளிலும், சுமார் 500 க்கும் மேற்பட்ட புறா, போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகளானது, மாவட்ட அளவில் கர்ணப்புறா, சாதாபுறா, இரட்டை கர்ணப்புறா, இரட்டை சாதா புறா, ஒற்றை கர்ணப்புறா, மற்றும் மூன்று கர்ணப்புறா என ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டிகளின் அடிப்படையில் இரட்டை சாதா புறா பந்தயத்தில், குறிச்சி பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார் கூண்டு பரத் என்பவரின் 31 ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் பறந்து, முதல்பரிசை தட்டி சென்றது.

இரண்டாம் பரிசை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த அச்சுதஹாசன் என்பவரின் புறா 30மணி நேரம் 38 நிமிடங்கள் பறந்து தட்டி சென்றது. இரட்டை கர்ணப்புறா பிரிவில், கரும்புகடை ரகுமான், ஆசிக் என்பவரின் புறா 22மணி நேரம் 17 நிமிடங்கள் பறந்து முதல் பரிசையும், கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த அச்சுதஹாசன் என்பவரின் புறா 19 மணி நேரம், 24 நிமிடங்கள் பறந்து இரண்டாம் பரிசையும் தட்டிச் சென்றது. இதே போன்று சாதா புறா போட்டியில், சூலூரை சேர்ந்த வல்லா ஜாக்கி ப்ரண்ட்ஸ் முதல் பரிசையும், புலியகுளம் மில்டன், ஜெய் என்பவரின் புறா இரண்டாம் பரிசையும் வென்றது.

இரட்டை சாதா புறா பிரிவில், கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் கனகராஜ் என்பவரின் புறா முதல் பரிசையும், புலியகுளம் தீபக், ரவி என்பவரின் புறா இரண்டாம் பரிசையும் வென்றது, வெற்றிபெற்ற அனைவர்க்கும் இன்று ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில், இன்று பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும், கோவை பீஜீயன் ஸ்போர்ட்ஸ் கிளப் சங்கத்தின் தலைவர் ரமேஷ், துணைதலைவர் குமார், செயலாளர் பாபு, ஒருங்கினைப்பாளர் கென்னடி, மற்றும் நிர்வாகிகளான மோகன், கண்ணன், கார்த்திக், மதுக்கரை தேவராஜ் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க