• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புனித ஜோசப் ஆலயம் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி குருத்துவம் பெற்று 50ம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டம்

December 30, 2021 தண்டோரா குழு

கோவை ஒண்டிப்புதூர் புனித ஜோசப் ஆலயம் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி அடிகளார் அவர்கள் குருத்துவம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதனை கொண்டாடும் விதமாக புனித ஜோசப் ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது. இதில் கோவைமறை மாவட்ட மேதகு ஆயர் டாக்டர் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கில், குருத்துவ பொன்விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

குருத்துவப் பொன்விழா மலரினை மேதகு ஆயர் டாக்டர் தாமஸ் அக்வினாஸ் வெளியிட்டார்.விழா மலரின் முதல் பிரதியை ஆரோக்கியசாமி அடிகளாரின் முன்னாள் மாணவரும் ,கோவை ராயல் கேர் மருத்துவமனை தலைவருமான டாக்டர் மாதேஷ்வரன் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய மேதகு ஆயர் டாக்டர் தாமஸ் அக்வினாஸ் ஆரோக்கியசாமி அடிகளாரைப் பற்றி கூறுகையில்,

“50ஆண்டு கால இறைப்பணியுடன் கல்விப்பணியும் சிறப்பாக ஆற்றினார் என்றார்.சிறந்த ஆசிரியராகவும், சிறந்த தலைமை ஆசிரியராகவும், சிறந்த தாளாளராகவும் அனைத்து கல்வி நிலையங்களின் நிர்வாகியாக திறம்பட பணியாற்றியவர்” என புகழ்ந்துரைத்தார்.

இவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய தமிழக ஆயர் பேரவை சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் அருட் தந்தை முனைவர் அ.சேவியர் அருள் ராசு பேசுகையில்,”

ஆரோக்கியசாமி அடிகளார் இறைப்பணி,பொதுத்தொண்டு,கல்விப்பணி செய்வதற்க்காகவே படைக்கப்பட்டவர் என்பதுடன், பெண்களுக்கு சமஉரிமை பகிர்ந்தளிக்கும் சமத்துவவாதி “என புகழாரம் சூட்டினார்.அகில உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ்,வத்திகான் நகரில் இருந்து குருத்துவ பொன்விழா வாழ்த்து மடல் அனுப்பி இருந்தார்.

வாழ்த்து மடலை கோவை மறைமாவட்ட பொருளாளர் ஜோ பிரான்சிஸ் அடிகளார் வாசித்தார். இந்த பொன்விழா நிகழ்வில் ஏராளமான அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள்,பங்கு மக்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க