• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்

December 31, 2021 தண்டோரா குழு

கோவையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தாருக்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, துணிப்பை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

வருகிற ஜனவரி 3ம் தேதியில் இருந்து இந்த பொருட்களை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.கோவை மாவட்டத்தில் 1,405 ரேஷன் கடைகளில் சுமார் 11 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகம் செய்ய டெண்டர்தாரர்களிடம் இருந்து, கோவை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகளுக்கு கொண்டுவரப்பட்டு, மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு மாநில நுகர் பொருள்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி, கடுகு, சீரகம் ஆகியவை 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், பாசிப்பருப்பு 100 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம், உளுந்தம்பருப்பு மற்றும் உப்பு 500 கிராம், ரவை, கோதுமை, வெல்லம் 1 கிலோ, ஆகிய 14 பொருட்களுடன் துணிப்பை மற்றும் நெய் சேர்த்து 16 பொருட்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள முந்திரி மற்றும் திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், 6 அடி கரும்பு ஆகிய 4 பொருட்கள் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் வினியோகிக்கப்படுகிறது.

இந்த வகையில் கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் (தலைமையகம்), மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, கருமத்தம்பட்டி, அன்னூர், மாதம்பட்டி, பூசாரிபாளையம் ஆகிய 9 இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு பொருட்கள் கொண்டு வரப்பட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உப்பு, வெல்லம் இதுவரை 90 சதவீதம் வந்துவிட்டது. மீதமுள்ள 12 பொருட்கள் 50 சதவீதம் வந்துள்ளன. அடுத்த 2 அல்லது 3 நாட்களில் 100 சதவீத பொருட்களும் கொண்டுவரப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு விடும். அங்கு பொருட்கள் தேவையான அளவு பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள 21 பொருட்களில், ஒரே நேரத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் கடைகளில் குவிந்து விடுவதை தவிர்க்கவும், கொரோனா தொற்று பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவும் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் மாவட்ட அளவில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு விநியோகம் செய்வதற்காக, வேஷ்டி, சேலைகள் கொண்டு வரப்பட்டு அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை 70 சதவீத வேஷ்டி, சேலைகள் வந்துள்ளதாகவும், மீதமுள்ள 30 சதவீதம் விரைவில் வந்துவிடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க