January 1, 2022 தண்டோரா குழு
கோவை மாநகரில் 132 பெண் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் கூறியதாவது:
கோவை மாநகரில் கடந்த 2020-ம் ஆண்டு 69 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதுவே 2021-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி வரை 77 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 2021-ம் ஆண்டு 13 பாலியல் பலாத்கார வழக்குகளும், 8 துன்புறுத்துதல் வழக்குகளும், 5 கடத்தல் வழக்குகளும், 132 பெண் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளும், 27 கொலை வழக்குகளும் பதிவாகி உள்ளன.
மேலும் 18 கலவர வழக்குகளும், 114 கஞ்சா வழக்குகளும், 1,594 புகையிலை பொருட்கள் விற்ற வழக்குகளும் 130 லாட்டரி விற்பனை வழக்குகளும் பதிவாகின.
இவ்வாறு அவர் கூறினார்.