• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

28 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் – வருவாய் துறை அமைச்சர் உதயகுமார்

December 19, 2016 தண்டோரா குழு

வர்தா புயலால் 28 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

வங்க கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு நிலை வர்தா புயலாக மாறி சென்னையை டிசம்பர் 12ம் தேதி தாக்கியது. அதிகபட்சமாக சென்னையில் 38செ. மீ மழை பெய்தது. மணிக்கு 19௦ கிலோ மீட்டர் வேகம் வரை புயல் காற்று வீசியது.

தமிழகம் முழுவதும் வர்தா புயலால் கன மழை பெய்தது. சென்னையில் பல ஆயிரம் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. தமிழகத்தின் பிற பகுதிகளில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் வர்தா புயலால் மூன்று மாவட்டங்களில், 28 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை எழிலகத்தில் திங்கட்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது;

வர்தா புயல் வீசிய போது, மூன்று மாவட்டங்களில், 24 பேர் உயிர் இழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக, 300 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. அதில், 104 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு, தேவையான உதவிகள் செய்யப்பட்டன.

புயலினால், 28 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 5,500 ஹெக்டேர் தோட்ட பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 529 மாடுகள், 299 ஆடுகள், 33 ஆயிரம் கோழிகள் இறந்துள்ளன. 70 ஆயிரம் குடிசைகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க