January 5, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பதிவுச்சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட மாவட்ட சமீரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பதிவுச்சான்று பெற்று செயல்பட வேண்டும். ஜனவரி 31ம் தேதிக்குள் பதிவு சான்று பெற விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு பதிவு சான்று பெறாமல் செயல்படும் தொண்டு நிறுவனத்தின் செயல்பாட்டினை நிரந்தரமாக நிறுத்தம் செய்யப்படும்.
பதிவு சான்று பெறுவதற்கான விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.