January 10, 2022 தண்டோரா குழு
காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கபட்டது.
காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர் கூட்டத்திற்கான புகார் பெட்டியில் மனு அளித்தார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மயூரா ஜெயக்குமார்,
இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தனது, பஞ்சாப் பயணத்தின் போது நடந்த சம்பவங்களை அரசியலாக்கி, பாரதிய ஜனதா கட்சியினரால் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரச்சாரம் குறித்து காங்கிரஸ் தலைவர்களும், உறுப்பினர்களும் மிகுந்த கவலையும், கவலையும் அடைவதாகவும், இது குறித்து உண்மையில் நடைபெற்றது என்ன, என்பதை இந்த விஷயத்தின் முழு உண்மை தன்மையை கண்டறிந்து, பொது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பிரதமர் தனது பஞ்சாப் பயணத்தை திடீரென ரத்து செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாக பொய்யான கதையின் பின்னணியில் சதி இருப்பதாக உணர்வதாகவும் எனவே, அதனை ஆராய்ந்து மக்களின் சந்தேகங்களை தமிழக ஆளுநர் தீர்த்து வைக்க வேண்டும் என்று இன்று மனு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் கலந்து கொள்ள இருந்த கூட்டத்தில் பேசாமல் பிரதமர் திரும்பியதற்கு பாதுகாப்பு குறைபாடுகள் காரணம் என்று பிரச்சாரம் செய்து வரும் பாஜக அரசு, பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அரசின் மீது பழியை போட்டு, வரும் தேர்தலில் கட்சியை இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டதாக நாங்கள் நினைப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும் பிரதமரின் பாதுகாப்புக்கு, சிறப்புப் பாதுகாப்புக் குழு என்றழைக்கப்படும் எஸ்பிஜி தான் பொறுப்பு, என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.