January 12, 2022 தண்டோரா குழு
கோவையில் இந்து சமய அறிநிலை துறையில் பணியாற்றும் அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் 1091 பேருக்கு பொங்கலை முன்னிட்டு புத்தாடை, சீருடைகளை மாவட்ட ஆட்சியர் சமீரண் வழங்கினார்.
தைத்திருநாள் பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பணியாற்றும் அர்ச்சகர்கள், பாட்டாச்சாரியார்கள், பூசாரிகள் ஆகியோருக்கு புத்தாடைகள் மற்றும் திருக்கோவில் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கீழ் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் என 429 நபர்களுக்கு புத்தாடைகளும், திருக்கோவில்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் 352 ஆண்கள் மற்றும் 310 பெண்கள் ஆகியோருக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் ரூ.23 லட்சம் மதிப்பிலான இந்த நலத்திட்டங்களை, 1091 பயனாளிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமிரன் நேரில் வழங்கினார்.