January 15, 2022 தண்டோரா குழு
தேசிய அளவிலான கல்வி உதவி தொகை தேர்வான யுனகாமி புத்திசாலி தேர்வை அறிவித்துள்ளது. ஜெஇஇ, நீட், யுஜி மற்றும் 7ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். இப்போட்டியில் வெற்றி பெறுவோர் கல்லூரி கல்வி உதவியாக ₹20 லட்சம் வரை அவர்களது பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்புக்கு பெறுவர்.
யுனகாடமி அறிவுத் திறன் தேர்வானது, திறமையான இளம் வயதினரை கண்டுபிடித்து அவர்களது கனவை நனவாக்க ஏற்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தின்படி, நான்கு கல்வி உதவி தொகை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஜனவரி 23, 29 மற்றும் பிப்ரவரி 6, 13 ஆகிய நாட்களில் நடக்கின்றன. இறுதி தேர்வுக்கு பொருந்தும் வகையில் இந்த தேர்வுகள் நடக்கின்றன. ஒவ்வொரு தேர்விலும் செயல்திறன், வார்த்தை திறன், தர்க்க ரீதியான காரணிகள் மற்றும் பொது அறிவியல் தேர்வுகள் இடம் பெறும்.
உயர்ந்த மதிப்பெண் பெறுவோர், அவர்களது மேற்படிப்பிற்கான உதவியையும், 100 சதவீத யுனகாடமி சந்தாவில் கல்வி உதவியையும் பெறுவர். ஜனவரி 29 மற்றும் பிப்ரவரி 13 ஆகிய நாட்களில் நடக்கும் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், கல்லூரி கல்வி உதவி தொகையாக கல்லூரி பட்டப்படிப்பிற்கு, பட்ட மேற்படிப்பிற்கு 20 லட்சம் ருபாய் வரை கல்வி உதவி தொகை பெறுவர். இந்த உதவி தொகை பிப்ரவரி 13 ல் வழங்கப்படும்.
இந்த தேர்வு எழுதுவோர் கற்பதில் தங்களுக்கு உள்ள பலவீனத்தை அறிய முடியும். விரிவான மதிப்பெண் அறிக்கை பெறவும் இயலும். மேலும் தங்களது சந்தேகங்களை வீடியோ பதிவு விடைகளை கண்டு தெளிய முடியும்.
போட்டி பற்றிய விதிமுறைகளை அறியவும், சேர விண்ணப்பிக்கவும் https://unacademy.com/scholarship/prodigy2022 என்ற இணைய தளத்தை பார்வையிடலாம்.