January 17, 2022 தண்டோரா குழு
மஹிந்திராஸ் டிரக் அண்டு பஸ் டிவிஷன், மஹிந்திரா குழும நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களின் மதிப்பை முன் மொழியும் வகையிலான அதன் தனித்துவமானதும், அதிரடியானதுமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
“அதிக மைலேஜை பெறலாம் அல்லது வாகனத்தை திருப்பி தரலாம்” என்ற உத்தரவாதத்தை அதன் அனைத்து பிஎஸ்6 டிரக்குகளான ஹெவி ரக வாகனமான பிளசோ எக்ஸ், இடைநிலை வாகனங்களான புரியோ, புரியோ 7 மற்றும் இலகு ரக வணிக வாகனமாக ஜயோ ஆகிய ரகங்களுக்கு அளிக்கிறது.
புதிய ரகங்கள் நிரூபிக்கப்பட்ட சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. 7.2 எல் எம்பவர் இன்ஜின் (ஹெச்சிவிஸ்) மற்றும் ஃபியூல் ஸ்மார்ட் தொழில் நுட்பத்துடன் கூடிய எம்டை டெக் இன்ஜின் (ஐஎல்சிவி) ஆகியன மிகவும் குறைவான ஆட் ப்ளூ நுகர்வுக்கும் மேலும் பல தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கும் வழிவகுக்கிறது.அதிநவீன ஐமேக்ஸ் டெலிமாட்டிக்ஸ் தீர்வுகளை தருவதோடு மட்டுமல்லாமல், இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து, அதிக மைலேஜ் கிடைப்பதை உறுதி செய்கின்றன.
சரக்கு பரிமாற்ற நிறுவனங்களின் இயக்க செலவில் பெரும்பகுதி (60 சதம் அதிகமாக) எரிபொருளுக்கே செலவாகிறது. இது முக்கியமான அங்கம் வகிப்பதால், இதை கருத்தில் கொண்டு, மஹிந்திரா பிஎஸ்6 ரக டிரக்குகள், இந்த அம்சங்களை கொண்டிருப்பதால் போட்டியில் முன்னணி இடத்தை வகிப்பதற்காக வாய்ப்பை அளிக்கிறது. இதனால் அவர்கள் முழு மன அமைதி மற்றும் நிதானத்துடன் தங்களது சரக்கு பரிவர்த்தனை தொழிலை மேற்கொள்வதால், அதிகமான பயனை அளிக்கிறது.
விழாவில், மஹிந்திரா அண்டு மஹிந்திரா லிட் நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் தலைமை செயல்பாட்டு அதிகாரி வீஜெய் நக்ரா பேசுகையில்,
“அதிக மைலேஜை பெறலாம் அல்லது வாகனத்தை திரும்ப தரலாம்” என்ற பல்வேறு ரக வாகனங்களுக்கும் அளிக்கப்படும் உத்தரவாதம் என்பது இடைநிலை மற்றும் கனரக வணிக வாகனத்துறையில் இலக்கை நோக்கிய மிக முக்கியமான சாதனை கட்டமாகும். எரிபொருளின் விலை அதிகரித்து வரும் வேளையில், வாடிக்கையாளர்களுக்கு மதிப்பை அளிக்கும் முன்மொழிவை அறிமுகப்படுத்த இது சரியான நேரமல்ல. இந்த பிரிவில் எங்களது உறுதிபாட்டை பிரதிபலிக்கும் அதே வேளையில், தொழில் நுட்ப ரீதியாக மேம்பட்ட, உயர்தர தயாரிப்புகள், இந்திய வணிக வாகனத் துறைக்கு பொருந்தக் கூடிய அதிகம் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்கும் மஹிந்திராவின் திறனில் எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இது மீண்டும் உறுதிபடுத்தும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
மஹிந்திரா அண்டு மஹிந்திரா லிட் நிறுவனத்தின் வணிக வாகன வர்த்தக பிரிவு தலைவர் ஜலாஜ் குப்தா கூறுகையில்,
“அதிக மைலேஜை பெறலாம் அல்லது வாகனத்தை திருப்பி தரலாம்” என்ற சலுகையை 2016 இல் கனரக வணிக வாகனமான டிரக்-க்கு வழங்கினோம். ஆனால் ஒரு டிரக் கூட திரும்ப வரவில்லை. எங்களது புதிய அறிமுகங்களான, அதாவது, லாஜோ, புரியோ ஐசிவி ரகம் மற்றும் புரியோ 7 ஆகியவையும் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்குகியுள்ளன. இந்திய வாடிக்கையாளரை பற்றிய ஆழமான புரிதலில் வேரூன்றிய மஹிந்திராவின் உயர்ந்த தொழில்நுட்ப வல்லமையின் விளைவாகும். மேலும், அது நெடுஞ்சாலையாக இருந்தாலும் சரி, வொர்க்ஷாப்பாக இருந்தாலும் சரி, எங்கள் வாடிக்கையாளர்களுக்காக கூடுதல் நேரத்தை செலவழித்து, டிரக்கின் அனைத்து பாகங்களையும் உத்தராவதத்துடன் கூடிய மிக விரைவாக பழுது நீக்கம் செய்து, எம்டிபி உறுதியான சர்வீஸ் உத்தரவாதத்தை வழங்குகிறது.
தற்போதைய அதிநவீன ஐமேக்ஸ் டெலிமாட்டிக்ஸ் தொழில் நுட்பமானது, தொலை தூரங்களுக்கு சரக்குகளை பரிமாற்றம் செய்பவர்களுக்கு தங்களது வாகனத்தின் மீது உறுதியான கட்டுப்பாட்டை வழங்குவதன் மூலம் உரிமையாளர்களின் செலவை வெகுவாக குறைக்க உதவுகிறது. இவை அனைத்தும் மற்றும் சிறந்த மைலேஜ் திறன் ஆகியவை இறுதியில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பான பலனை அளிக்கும்” என்றார்.
இந்த அதிரடியான வாடிக்கையாளர் மதிப்பு முன்மொழிவு என்பது நிறுவனத்தின் பயணத்தில் வணிக வாகனப் பிரிவில் தன்னிகரில்லாத போட்டியாளராக மாறுவதற்கு உதவும் என மஹிந்திரா நிறுவனம் நம்புகிறது. நிறுவனத்தின் இணையதளத்தில் தயாராக உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளால் மைலேஜ் உத்தரவாதம் நிர்வகிக்கப்படுகிறது.