• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செல்வபுரம் பகுதியில் உள்ள மார்ட்டின் டைசன் அடுக்கு மாடி குடியிருப்பில் நடைபெற்ற பொங்கல் விழா

January 17, 2022 தண்டோரா குழு

கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள மார்ட்டின் டைசன் அடுக்கு மாடி குடியிருப்பில் நடைபெற்ற பொங்கல் விழா விளையாட்டு போட்டியில் சிறுவர்,சிறுமியர் மற்றும் பெரியவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள மார்ட்டின் டைசன் அடுக்கு மாடி குடியிருப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு விழாக்களும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் தொடர்ந்து பதினோறாவது ஆண்டாக பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் மார்ட்டின் டைசன் ரெசிடன்சி ஓனர்ஸ் வெல்பேர் அசோசியேசன் சார்பாக குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றது.

கொரோனா அரசு விதிமுறைகளை பின்பற்றி,சிறுவர்,சிறுமியர் மற்றும் பெரியவர்களுக்கான ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, இறகு பந்து, எலுமிச்சை பழத்தை ஸ்பூனில் வைத்து ஓடுதல், சாக்கு போட்டி, பலூன் உடைத்தல், , கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.தொடர்ந்து வெற்றியாளர்கள்,பங்கேற்பாளர்களுக்கு பரிசு வழங்கும் விழா மார்ட்டின் டைசன் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றது.

மார்ட்டின் டைசன் ரெசிடன்சி ஓனர்ஸ் வெல்பேர் அசோசியேசன் நிர்வாகிகள் கண்ணன்,கிறிஸ்டோபர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவை சுப்ரமணி, வெங்கடேஷ், மற்றும் ராஜா ஒருங்கிணைத்தனர்.தலைமை விருந்தினர்களாக கோவை வடக்கு மாவட்ட தி.மு.க.பொறுப்பு குழு உறுப்பினர் டி.பி.எஸ்.ரவி,டாக்டர் விஸ்வநாதன், தீபா,டாக்டர் செந்தில்,சுரேஷ்,ஜகந்நாதன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் கலந்து கொண்ட, இளைஞர்கள், சிறுவர், சிறுமியர், தம்பதியர் ஆகியோர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கி கவுரவித்தனர்.

முன்னதாக இதில் பேசிய சிறப்பு அழைப்பாளர்கள் தமிழக பாரம்பரிய கலைகளை ஊக்குவித்து வரும் தற்போது தமிழக அரசை பாராட்டுவதாகவும்,இதனால் இருந்து வரும் கிராமப்புற கலைகளில் இன்றைய இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டதுவங்கியுள்ளதாக தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் கேபிள் மணிகண்டன், அசோசியேஷன் பல்வேறு நிலை நிர்வாகிகள் நித்யா பிரகாஷ், ஸ்ரீமதி,டாக்டர் ரூபா, சிவராமன், பிரகாஷ் குமார்,லோகநாதன் உட்பட குடியிருப்பு வாசிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க