• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறுத்தை பிடிபட்டால் கோவை வனச்சரகத்தில் விடப்படும் – கோவை மண்டல வனக்காப்பாளர்

January 18, 2022 தண்டோரா குழு

சிறுத்தை பிடிபட்டால் கோவை வனச்சரகத்தில் விடப்படும் கோவை மண்டல வனக்காப்பாளர் ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் உள்ள தன்னாசி ஆண்டவர் கோயில், கோலமாவு மலைப்பகுதியில் கடந்த நவம்பர் மாதம் முதல் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை புலி ஒன்றின் நடமாட்டம் இருந்து வந்தது.இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் சிறுத்தை புலியை பிடிக்க 3 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் குடோனில் சிறுத்தை இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடோன் ஊழியர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, வனத்துறையினர் வந்து குடோன் முழுவதும் இருந்த ஓடுகளில் வலை விரித்தனர். வெளியே செல்ல உள்ள 2 வழிகளிலும் வனத்துறையினர் சிறுத்தை புலியை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர்.

கூண்டில் இறைச்சி வைக்கப்பட்டு அதனை சுற்றியும் வலை அமைக்கப்பட்டள்ளது. கால்நடை மருத்துவர் குழுவினர் வந்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க முடியுமா என ஆய்வு செய்தபோது அதில் சிக்கல் இருப்பது தெரிய வந்ததால், சிறுத்தை தானாக கூண்டில் சிக்கும் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளனர். சிறுத்தை புலியின் நடவடிக்கைகளை கண்காணிக்க கூண்டுகளுக்கு அருகிலேயே இரவுநேர கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கேமராவில் இன்று அதிகாலை சிறுத்தை புலி கூண்டை நோக்கி நெருங்கி வந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகளை தற்போது வனத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில் கோவை மண்டல வனக்காப்பாளர் ராமசுப்பிரமணியம் சிறுத்தை புலி பதுங்கி உள்ள கூட உன்னை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்,

தற்போது குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தை புலி ஏற்கனவே குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்து நாய்களை வேட்டையாடியது என்பதை வனக்கால்நடை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளதாகவும், இது 3 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை புலியாக இருக்கக் கூடும் எனவும் தெரிவித்தார். இன்று இரவுக்குள் கூண்டில் சிறுத்தை பிடிபடும் என நம்பிக்கை தெரிவித்த அவர், பாழடைந்த குடோனில் பதுங்கி உள்ளதால் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் சிக்கல் உள்ளது எனவும், அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் திட்டம் இல்லை எனவும் தெரிவித்தார்.

சிறுத்தை புலி பிடிபட்ட பிறகு அதன் உடல் நலத்தை கண்காணித்து பின்னர் அதனை, கோவை மாவட்டத்தில் உள்ள அடர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட முடிவு செய்துள்ளதாகவும் கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் தெரிவித்தார்.

மேலும் படிக்க