• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

யூ.டி.ஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் – பங்குச் சந்தை முழுக்க வாய்ப்புகளைத் தேடும் ஃபண்ட்!

January 19, 2022 தண்டோரா குழு

பங்குச் சந்தை முழுக்க முதலீடு செய்யும் ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும் என நிதி நிபுணர்கள் அடிக்கடி முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்கிறார்கள். அதாவது, பன்முக மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும் என்கிறார்கள்.

லார்ஜ் கேப் ஃபண்ட்களில் பங்குச் சந்தையின் மதிப்பில் 80 சதம் முதல் 85 சதவிகிதமாக உள்ள லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகள், பரந்த பங்குச் சந்தைகள் ஃ குறியீடுகளை குறிப்பதாக இருக்கிறது. இந்த லார்ஜ் கேப் ஃபண்ட்களை முதலீட்டாளர்கள் ஆதரிக்க வேண்டும்.

இந்த லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளில், பல்வேறு பங்குச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகள், பல்வேறு முதலீட்டு அணுகு முறைகள் அல்லது ஒட்டு மொத்த சந்தையில் சில சுழற்சிகளில் வாய்ப்புகள் உள்ளன. இவை நிதி மேலாளர்களுக்கு பங்குச் சந்தை மதிப்பின் அடிப்படையில் பிரத்யேக முதலீட்டு வாய்ப்புகளை அளிக்கிறது. இந்த முதலீட்டுப் பாணி, முதலீட்டுக் கலவையின் இடர்ப்பாட்டை குறைக்கிறது.

இது போன்ற மியூச்சுவல் ஃபண்ட்களில் ஒன்றுதான், யூ.டி.ஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட். இந்தப் பிரிவு ஃபண்ட்கள், பல்வேறு பங்குச் சந்தை மதிப்பை கொண்டுள்ள, குறிப்பிட நிறுவனப் பங்குகளில் உள்ளார்ந்த மதிப்பின் அடிப்படையில் முதலீட்டு வாய்ப்புகளை கண்டு பிடித்து முதலீடு செய்கின்றன. இதன் பொருள், ‘மதிப்பு’ பாணி முதலீடாக இருக்கிறது. இங்கே, ‘மதிப்பு’ என்பது ஒரு நிறுவனப் பங்கை அதன் உள்ளார்ந்த மதிப்பை விடக் குறைவான விலைக்கு வாங்குவதாக உள்ளது. உள்ளார்ந்த மதிப்பு என்பதை, ஒரு நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்காக பல்வேறு கால கட்டத்தில் உருவாக்கி உள்ள பண வரத்தின் தற்போதைய மதிப்பு என எளிமையாகக் குறிப்பிடலாம்.

குறைத்து மதிப்பிடப்பட வணிக நிறுவனங்களை, இரு முறைகளில் கண்டுபிடிக்க இயலும். முதல் முறை நிறுவனத்தின் போட்டித் தன்மையின் நிலைத்தன்மையை சந்தை அங்கீகரிக்காமல் இருக்கும் நிலையாக இருக்கும். இரண்டாவது முறை என்பது, நிறுவனம் நீண்ட காலத்தில் வளர்ச்சிப் பாதையில் செல்வதாக இருக்கும். வணிக சுழற்சி காரணங்களால் இந்த நிறுவனங்கள் இப்போது சவால்களைச் சந்தித்து வருபவையாக இருக்கும். கடந்த காலங்களில் இந்தச் சவால்களை நிறுவனங்கள் சமாளித்துச் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களாக இருக்கும்.

அதேநேரத்தில், நிறுவனத்தின் முக்கிய வணிகம் வலிமையானதாக இருப்பதோடு, சிறப்பான எதிர்காலம் (பண வரத்துகள், வருவாய் விகிதங்கள்) இருக்கும். இந்த நிலையில், குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கும் இந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதற்குச் சரியான நேரமாக இருக்கும். இந்த இரு முறைகளிலும் மலிவான விலையில் நிறுவனப் பங்குகளை வாங்க வாய்ப்பு உள்ளது.

யூ.டி.ஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், கடந்த 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2021 டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி, 4.65 லட்சம் முதலீட்டாளர்களுடன் 6,600 கோடி ரூபாய் இந்த ஃபண்டின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஃபண்டிற்கான முதலீட்டுக் கலவையில், லார்ஜ் கேப் பங்குகள் அதிகமாக இருக்கின்றன. இருந்தாலும், மாறுபடும் மதிப்பீட்டின் அடிப்படையில் மிட் கேப் நிறுவனப் பங்குகளும் இடம் பெறுகின்றன. 2021 டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி, இந்த ஃபண்டில் சுமார் 65 சதவிகித தொகை லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளிலும் மீதி மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் முதலீட்டுக் கலவையில், இன்ஃபோசிஸ் லிமிடெட், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் லிமிடெட், ஹெச்.டி.எஃப்.சி பேங்க் லிமிடெட், ஆக்ஸிஸ் பேங்க் லிமிடெட், பார்தி ஏர்டெல் லிமிடெட், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டெக் மஹிந்திரா லிமிடெட், ஐ.டி.சி லிமிடெட், எய்ஷர் மோட்டார்ஸ் லிமிடெட் மற்றும் எஸ்கார்ட்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனப் பங்குகள் 47 சதம் இடம் பெற்றுள்ளன.

யூ.டி.ஐ வேல்யூ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுக் கலவையை வலிமையானதாக உருவாக்க விரும்பும் மற்றும் நீண்ட காலத்தில் மூலதன வளர்ச்சியை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்கக்கூடும். இதில், நடுத்தரக் காலம் முதல் நீண்ட காலம் வரையில் நடுத்தர அளவுக்கு இடர்ப்பாட்டைச் சந்திக்கும் திறன் கொண்ட மற்றும் நியாயமான வருமானம் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கும் ஏற்றதாக இருக்கலாம்.

மேலும் படிக்க