January 20, 2022 தண்டோரா குழு
அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன்.இந்நிலையில்,
வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், கே.பி.அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன்,சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதையடுத்து, சென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் 200க்கும் அதிகமான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.தெலங்கானா மாநிலத்திலும் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து வருகிறது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சோதனையில் சிக்கும் 6வது முன்னாள் அமைச்சர் அன்பழகன் என்பது குறிப்பிடத்தக்கது.