January 21, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் 137 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், ஒரே தெருவில் 5க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவை மாவட்டத்தில் 137 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘மாவட்டத்தில் 137 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள வீடுகள், தனிமைப்படுத்தப்படுகின்றன. அதேபோல், ஒரே தெருவில் 5க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொற்று கண்டறியப்படும் இடங்கள் அடைக்கப்படுகின்றன’’ என்றார்.