• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்கின்றது – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

January 25, 2022 தண்டோரா குழு

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க தினத்தை முன்னிட்டு கோவை அதிமுக அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் தமிழ் மொழிக்காக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ஜுனன், அருண்குமார், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு, தியாகிகள் நடராசன், தாளமுத்து உடபட 12 தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி கூறுகையில்,

அதிமுக, தமிழ் மொழிக்காக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு எப்போதும் அஞ்சலி செலுத்தி உரிய மரியாதை வழங்கி வருவதாக தெரிவித்தார். மேலும் இந்த மொழி போரில் கோவை மாவட்ட முக்கிய பங்காற்றி இருப்பதாகவும் பொள்ளாச்சி உட்பட பல பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பல்வேறு போராட்டங்களை அண்ணா நடத்தியதால் திமுக ஆட்சி அமைந்ததாக தெரிவித்த அவர் அதனை தொடர்ந்து அதிமுக வீர மறவர்களுக்கு இப்போது வரை அஞ்சலி செலுத்தி வருவதாக கூறினார். தற்போது வரையிலும் அதிமுக இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் வீட்டில் அவரை களங்கப் படுத்த வேண்டும் என்பதற்காகவே தற்போது பொறுப்பிலுள்ள அமைச்சரின் தூண்டுதலின் பெயரில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளதாகவும், நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக வெற்றி யை பாதிக்கவும் தேர்தல் பணிகளை முடிக்க வேண்டும் என்பதற்காகவே சோதனை நடத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் முன்னாள் அமைச்சரின் வீடுகளில் இருந்து தற்பொழுது ஒன்றிய செயலாளர் வரை திமுக சோதனை நடத்தி வருவதாகவும் இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க