January 26, 2022 தண்டோரா குழு
குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்தியை புறக்கணிப்பு செய்த மத்திய அரசை கண்டித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியரசு தினவிழாவில் டெல்லியில் நடைபெற்ற அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஊர்தியில் இடம்பெற்றுள்ள வ.உ.சி வேலு நாச்சியார் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. தேசிய அளவில் பார்க்கும் பொழுது பல மக்களுக்கு அவர்களை யார் என தெரியாது என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக அணிவகுப்பு குழுவிடம் இருந்து தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
எனவே மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் பொதுமக்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்புச் செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பாரதியார், வ.உ.சிதம்பரனார், சுபாஷ் சந்திரபோஸ், வேலு நாச்சியார், நாராயண குரு ஆகியோரின் புகைப்படங்களையும் கண்டனங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து தமிழக அரசு ஊர்தி சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பங்கேற்பு செய்த தமிழக முதலைமைச்சருக்கு திராவிட இயக்க தமிழர் பேரவையினர் நன்றிகளை தெரிவித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விபி கோவிந்தராஜ் மற்றும் திராவிட தமிழர் கட்சி வென்மணி,திவிக நெருதாஸ் ,ஆடிட்டர் ரகுபதி,வீரபாண்டி பாபு,ஈரோடு சரவணன் சண்முகவேல்,பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.