• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தேர்தல் பறக்கும் படையிடம் 2 நாட்களில் ரூ.21.33 லட்சம் சிக்கியது

January 31, 2022 தண்டோரா குழு

கோவையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த இரண்டு நாட்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.21.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதை அடுத்து, கோவை மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த அரசியல் விளம்பர பேனர்கள், போஸ்டர்கள் அகற்றப்பட்டு, சுவர் விளம்பரங்களும் அழிக்கப்பட்டன. தமிழகம் முழவதும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்.19-ல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு, கவுன்சிலர்கள் பதவியேற்பும், அதையடுத்து, மாநகராட்சிகளில், மறைமுக தேர்தல் வாயிலாக மேயர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இந்த வகையில், தமிழகத்தில், 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சி என, 649 உள்ளாட்சி அமைப்புகளில், 12 ஆயிரத்து, 838 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேதி 26-ம் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. வேட்பு மனு தாக்கல் 28-ம் தேதி துவங்கியது.தேர்தல் அறிவிக்கப்பட்ட, 26ம் தேதி, மாலை முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்குவந்து விட்டதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் விதமாக, மண்டலம் தோறும்,பறக்கும் படை அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி, உதவி செயற்பொறியாளர், இரு போலீசார், ஒளிப்பதிவாளர் உட்பட நான்கு பேர் என 24 மணி நேரமும்கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.இந்த நிலையில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க கோவை மாவட்டத்தில் 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த பறக்கும் படைகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை 82-வது வார்டுக்கு உட்பட்ட சுங்கம் பைபாஸ் பகுதியில் காரை மறித்து மத்திய மண்டல பறக்கும் படை அதிகாரி சுரேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர்.அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

நேற்று வடக்கு மண்டலத்தில் விழா குறிச்சி ரோடு பகுதியில் பறக்கும் படை அதிகாரி தனலட்சுமி தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது மொபட்டில் வந்த பிரபாகரன் என்பவர் உரிய கவனமின்றி எடுத்துச் சென்ற ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 700 ரூபாயை பறிமுதல் செய்தனர்.நேற்று இரவு கவுண்டம்பாளையம் பகுதியில் 2 லட்ச ரூபாய் சிக்கியது.

கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் பறக்கும் படையினர் 21 லட்சத்து 33 ஆயிரத்து 700 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். இதனை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் பொதுமக்கள், வியாபாரிகள் ஆகியோர் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பொருட்கள் மற்றும் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும். உரிய ஆவணங்களை சமர்பித்து பறிமுதல் செய்யப்பட்டவைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க