• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஊழியர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயிற்சி

January 31, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஊழியர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயிற்சிஅளிக்கப்படவுள்ளது.பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது

கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 41 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 110 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் 10 ஆயிரத்து 172 பேர் இந்த தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதையடுத்து தேர்தல் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மொத்தம் 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இதன்படி முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. கோவை மாநகராட்சி தேர்தலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கோவை நிர்மலா கல்லூரி, பி.எஸ்.ஜி.கல்லூரி, ராமநாதபுரம் பெண்கள் பள்ளி,ஆர்.எஸ்.புரம் அம்மணியம்மாள் பள்ளி, ஆர்.கே.வி. பள்ளி ஆகிய 5 இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதேபோல் 7 நகராட்சி தேர்தலில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அந்தந்த நகராட்சி பகுதியிலும், பேரூராட்சி தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு 9 இடங்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியில் 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர். கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு 50 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. எனவே கன்ட்ரோல் யூனிட் மற்றும் பேலட் யூனிட் ஆகிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு ஒன்றுடன், ஒன்றை இணைக்க வேண்டும், பழுது ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்,

வாக்குப்பதிவு முடிந்ததும் எவ்வாறு சீல் வைக்க வேண்டும், வாக்குப்பதிவிற்கு முன் அதில் உள்ள தகவல்களை அழிப்பது எப்படி, கன்ட்ரோல் யூனிட்டில் பேட்டரி பழுது ஏற்பட்டால் மாற்றுவது எவ்வாறு என்பது உள்ளிட்டவை குறித்து பல்வேறு செயல் விளக்கங்களை இந்த பயிற்சியின் போது அதிகாரிகள் அளித்தனர்.மேலும் பயிற்சியில் கலந்து கொண்ட ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி குறித்த விளக்க கையேடுகள் வழங்கப்பட்டன.

இந்த பயிற்சி முகாமில் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு 9 மாதங்களை கடந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. கொரோனா அச்சம் காரணமாக பயிற்சியில் பங்கேற்ற அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். இதனைத்தொடர்ந்து விரைவில் 2-ம் கட்ட பயிற்சி வரும் 9ம் தேதியும், வாக்குப்பதிவுற்கு 2 நாட்கள் முன் 3-ம் கட்ட பயிற்சி வரும் 18ம் தேதியும் அளிக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க