• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் அரசியல் கட்சிகளின் கொடிகள் தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரம்

February 1, 2022 தண்டோரா குழு

நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கலும் துவங்கியுள்ள நிலையில் தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து கோவையில் அரசியல் கட்சிகளின் கொடிகள் தயாரிப்பு மற்றும் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

கோவை டவுன்ஹால், பெரியகடை வீதி , காந்திபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் அரசியல் கட்சிகளின் கொடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கொரொனா காரணமாக கொடிகள் விற்பனை கடந்த இரு வருடமாகவே விற்பனை மந்தமாகவே இருந்து வந்தாகவும், தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாலும், கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வு கொடுக்கப்பட்டு இருப்பதாலும் அரசியல் கட்சிகளின் கொடிகள் தயாரிப்பு பணி விறு விறுப்பாக நடைபெற்று வருவதாக கொடி தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சுயேட்சை சின்னங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்பதால் பல்வேறு சுயேட்சை சின்னங்களுடன் கூடிய கொடிகளும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் பணிகள் விரைவாக நடந்து வருவதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்து இருப்பதாகவும் கொடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.கடையில் கட்சிகொடிகள் தயாராக இருப்பதால் உடனுக்குடன் வாங்க முடிவதாகவும், ஆர்டர் கொடுத்தாலும் உடனடியாக கிடைத்து விடுவதாகவும் கோவை மட்டுமல்லாமல் சுற்றியுள்ள நகரப்பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் வந்து வாங்கி செல்வதாக அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

கூட்டணி உறுதியானவுடன், அந்த கட்சி சின்னங்களை இணைத்தும் கொடிகள் தயாரிக்க இருப்பதாகவும் கொடி தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். தேவையான அளவுகளில் தைத்து, ஸ்கீரின் பிரிண்டிங் செய்து கொடிகளை தயார் செய்து வைத்துள்ள கொடி தயாரிப்பாளர்கள் அரசியல் கட்சியினரின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்ய இருப்பதாகவும் அடுத்த சில தினங்களில் பி்ரச்சாரம் தீவிரம் அடையும் நிலையில் விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க