February 3, 2022 தண்டோரா குழு
தனியார் வானொலி மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
கொரொனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் தனியார் நிறுவனங்களும் தனியார் அமைப்புகளும் அரசாங்கத்துடன் இணைந்து பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் வானொலி(சூரியன் எப்.எம்), தனியார் நிறுவனங்கள் சார்பில் 3 கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள் ஒரு வாரத்திற்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளும். SMS (Soap, Mask, Social distance) என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், கோவை மாவட்ட ஆட்சியர்கள், கோவை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை முதல்வர்கள் பேசிய விழிப்புணர்வு உரைகள் ஒலிப்பரப்பப்பட உள்ளன.