February 3, 2022 தண்டோரா குழு
கேஜி இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிட் நிறுவனம், குளோபல் சாப்ட்வேர் சர்வீஸ் மற்றும் பிசினஸ் சப்போர்ட் சர்வீசஸ் ஆகிய இரண்டு பிரிவுகளும் இரு முதன்மை நிறுவனங்களாக செயல்படுவதற்கு அதன் இயக்குநர்கள் குழு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆகவே அவை தங்களது உண்மையான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் மிக வேகமாக வளர்ச்சி திட்டங்களை தொடர முடியும்.
இது குறித்து கேஜிஐஎஸ்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் அசோக் பக்தவத்சலம் கூறுகையில்,
“இந்த நிறுவனம் பல ஆண்டுகளாக பல மடங்கு வளர்ச்சியை கண்டு வருகிறது. பெருந்தொற்று காலகட்டத்துக்குப் பிறகு தற்போது மிகப் பெரிய வணிக வாய்ப்புகள் உருவாகியுள்ளதால், சாப்ட்வேர் மற்றும் பிசினஸ் சப்போர்ட் ஆகிய வணிகங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஆகவே இரண்டு பிரிவுகளையும் இரு நிறுவனங்களாக செயல்பட அதிகாரமளிப்பதன் மூலம் அவற்றின் உண்மையான ஆற்றலையும், தங்களது செயல்பாடுகளை மேம்படுத்தும் ப்ரத்யேக யுக்திகளையும் தொடர முடியும் என நான் நம்புகிறேன். வணிக நிறுவனங்கள் மற்றும் மதிப்பு உருவாக்கம் ஆகிய இரண்டிலும் நாங்கள் தொடர்ந்து பொறுப்புடன் செயல்பட்டு வருகிறோம்” என்றார்.
தேசிய தீர்ப்பாயத்தின் நெறிமுறைகளை பின்பற்றி இரு முதன்மை நிறூவனங்களாக செயல்படுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரு தனி நிறுவனங்களாக செயல்பட அதிகாரமளிப்பதன் மூலம் கேஜிஐஎஸ்எல் டெக்னாலஜிஸ் நிறுவனம் கேஜிஐஎஸ்எல் என்ற பிராண்ட் பெயரை பயன்படுத்தும் அதே வேளையில் கேஜி இன்விக்டா தனக்கென புதிய அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும்.
இந்த செயல்முறையின் கீழ் கேஜிஐஎஸ்எல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், தனது புதுமையான செயல்பாடுகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் தயாரிப்புகளை அளிப்பதுடன், தங்களது வாடிக்கையாளர்களுக்கு மிக சிறந்த சேவை அனுபவத்தை அளிக்கும்.
இரு தனி நிறுவனங்களாக செயல்பட ஆரம்பிப்பதன் மூலம், கேஜிஐஎஸ்எல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், தனது வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு மிகவும் மேம்பட்ட அடுத்த தலைமுறை வாடிக்கையாளர் அனுபவத்தை (சிஎக்ஸ் – next Generation Customer Experience (CX)) அளிக்கும். இதற்காக மென்பொருள் தயாரிப்புகளை வழங்கும் உலகின் வியக்கத்தக்க சாஃப்ட்வேர் நிறுவனமாக உருவெடுப்பதற்கு அவசியமான புதுமை கண்டுபிடிப்புகளுக்கான உந்துதலையும், உத்வேகத்தையும் முன்னெடுக்கும்.
கேஜிஐஎஸ்எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பிரசாத் சண்முகம் கூறுகையில்,
“கேஜிஐஎஸ்எல் டெக்னாலஜிஸ் நிறுவனம் என்பது வங்கி, காப்பீடு, பங்குச்சந்தை மற்றும் சொத்து மேலாண்மை பிரிவுகளில் கவனம் செலுத்தும் ஒரு பன்முக தயாரிப்புகளை வழங்கும் நிறுவனமாகும். இவ்வாறு இரு தனி நிறுவனங்களாக செயல்படுவது தங்களது செயல்பாடுகள் மற்றும் சுதந்திரமான யுக்திகளை மேற்கொள்வதற்கான ஒரு நடவடிக்கையாகவும், உலகளாவிய தளத்தில் செயல்பட வேண்டும் என்ற எங்கள் லட்சியத்தை முன்னெடுத்து செல்வதற்கும் உதவும். வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொள்வதன் வாயிலாக, அவர்களுக்கு சிறப்பான பலன்களை எங்களால் அளிக்க இயலும். உதாரணமாக, CAPEX அல்லது OPEX மாதிரியான தயாரிப்புகள் அல்லது SAAS/PAAS/Cloud@Customer/On Premise models போன்ற தயாரிப்புகளை வழங்க இயலும்” என்றார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் கேஜி இன்விக்டா சர்வீஸ் பிரைவேட் லிட் அதிக வாடிக்கையாளர்களை தக்க வைத்துள்ளதுடன், வணிக மாற்றம், வளர்ச்சி ஆகியவற்றில் தனக்கென தனித்துவமான இடத்தை வகித்து வருகிறது. இரு தனி நிறுவனங்களாக செயல்படும் இந்த நடைமுறை ஒரு வணிக உத்தியாக மிகச் சிறந்த தீர்வுகளை வழங்கும்.
உடல்நலம், காப்பீடு, அடமானம், நிதி, ஆட்டோமோட்டிவ், டெல்கோ, கேபிள், இணையம், இ காமர்ஸ் என 500-க்கும் மேற்பட்ட பல்வேறு தரப்பிலான பிரபலமான கார்ப்பரேட் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக உலகம் முழுவதிலும் கேஜி இன்விக்டா சர்வீசஸ் பிரைவேட் லிட் கொண்டுள்ளது. உலக அளவில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொழில் நிபுணர்களையும், டெலிவரி மையங்களையும் செயல்படுத்தி வருகிறது.
இது குறித்து KG Invicta Services Private Limited நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, ஜெயமுரளி பாலகுருசாமி கூறுகையில்,
“மக்கள், செயல்முறை மற்றும் தொழில் நுட்பத்தின் வாயிலாக அதிகரித்து வரும் வணிக மதிப்பை வழங்குதல்” என்பதை புதிய பிராண்ட் தனது நோக்கமாக கொண்டுள்ளது. இந்த மாற்றம் அனைத்து தொடர்புகளிலும் நிறுவனத்தின் அடையாளத்தை மறு சீரமைப்புக்கு உள்ளாக்குகிறது. நமது நோக்கம், மதிப்பு, நெறிமுறைகள், லட்சியங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் தனித்து நிற்க வேண்டும், அந்த வகையில் நாங்கள் உயர்ந்த லட்சியங்ளுக்காக தனித்து நிற்போம் என உறுதியாக நம்புகிறோம். ஆகவே, இதன் மூலம் வாடிக்கையாளர்களுடான மேம்பட்ட அனுபவம், அதிவேக வளர்ச்சி, செயல்படும் ஆற்றல் ஆகியவற்றை தடையின்றி அடைய முடியும்” என்றார்.