February 3, 2022 தண்டோரா குழு
கோவை ஏடிஎம்களில் தொடர்ந்து பேட்டரிகள் திருட்டு போக கூடிய சம்பவங்கள் நடந்து வந்துள்ளது. இதனால் விசாரணை நடத்தி திருடர்களை பிடிக்க போலீசார் சென்றனர்.
காவல்துறை கண்களில் மண்ணை தூவி பேட்டரிகள் களவாடிய சம்பவங்கள் கோவையில் நடந்தேறி வந்தன. இந்நிலையில் வெரைட்டிஹால் பகுதி ஏடி.எம்.ஒன்றில் பேட்டரிகள் காணாமல் போனது தெரிய வந்தன. இதனை தொடர்ந்து வெரைட்டி ஹால் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சிங்காநல்லூர் பகுதியிலும் பேட்டரி காணாமல் போனது தெரிய வந்தன. உடனடியாக சிங்காநல்லூர் போலீசார் பேட்டரி திருடனை பிடிக்க களமிறங்கினர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து பேட்டரிகள் திருடுபோன சம்பவத்தால் போலீசார் ஏடிஎம்களில் முகாமிட்டனர். இந்தநிலையில் சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான போலீசார் பேட்டரி காணாமல்போன வங்கி அதிகாரிகள் தந்த புகாரின் அடிப்படையில் புலனாய்வு செய்த நிலையில் செந்தில் குமார் என்ற நபரை கைது செய்தனர்.
செந்தில் குமாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போலீசார் அதிர்ந்து போகும் அளவிற்கு வாக்குமூலம் தந்திருக்கின்றார். பேட்டரி திட்டுவதற்கு சாதாரணமாக சென்றால் போலிஸாரிடம் மாட்டிவிடுவோமென நினைது பேட்டரி மெக்கானிக் போன்று ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பட்டப்பகலிலேயே பேட்டரிகளை திருடி இருக்கின்றார்.
பேட்டரிகளை கழட்டும்போது வாடிக்கையாளர்கள் கேட்டால் நான் மெக்கானிக் என்றும் பேட்டரியை சரிசெய்ய வந்து இருப்பதாகவும் தெரிவித்து லாவகமாக பேட்டரியை திருடி பழைய இரும்பு கடையில் விற்று வந்திருக்கின்றார். இரவு நேரங்களில் பேட்டரி திருடுவதற்கு ஏ டி எம்களுக்கு சென்றால் போலீஸ் வந்து விடுவோமென்று எண்ணி பேட்டரி திருட்டு சம்பவத்தை பட்டப்பகலிலேயே துணிகரமாக நிகழ்த்தி செந்தில்குமார் கோவை ஏடிஎம்களில் பேட்டரிகளை கொள்ளையடித்து இருக்கின்றார்.
திருடர்களை பிடிக்க இரவில் போலீசார் ரோந்து செல்கின்ற நிலையில் பட்டப்பகலில் மெக்கானிக் போர்வையில் ஏடிஎம்களில் திருடினால் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்கின்ற யுக்தியினை கையாண்ட செந்தில் பேட்டரிகளை மட்டுமே குறிவைத்து அதுவும் பட்டப்பகலிலேயே திருடுவது வாடிக்கையான செயலாக கடைபிடித்து இருக்கின்றார்.பேட்டரிகளை மட்டுமே திருடி போலீசாரிடம் அகப்படாமல் இருக்க செந்தில்குமார் வகுத்த செயல்திட்டம் போலீசையே அதிர செய்திருக்கின்றன.
திருடர்களை பிடிப்பதற்காக போலீஸ் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு மாறாக செயல்பட்டு பேட்டரிகளை திருடிய திருடன் செந்தில்குமார் சிங்காநல்லூர் போலீசார் பிடித்து சிறையில் அடைத்து துரித நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர்.