• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவைக்கு கழக ஆட்சி செய்த திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்- முதலமைச்சர் ஸ்டாலின்

February 7, 2022 தண்டோரா குழு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள சஹிதா ஹாலில் காணொலி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு உள்ளாட்சியில் தொடரட்டும் நம் ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்திக்கிறோம். ஆட்சி என்பது ஐந்து ஆண்டு காலம் ஐந்து ஆண்டுகாலத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் அதான் நல்ல ஆட்சி.
ஒரு ஆண்டு கூட ஆகாத நிலையில் சொன்ன வாக்குறுதிகளில் முக்கால் பங்கு வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம்.

மேலும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக உங்களை நேரில் சந்திக்க முடியாத சூழல் அதனால்தான் காணொளி மூலம் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவையில் முதல் கூட்டமாக நடைபெறுகிறது.வழக்கம் போல் சிறப்பாக செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்துள்ளார்.நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் ஒரு தாய் பிள்ளை பாசத்தாலும் அன்பாலும் உறவாலும் நீங்கள் வேறல்ல நான் வேறல்ல என்ன உணர்வுடன் நான் பரப்புரை மேற்கொள்கிறேன்.

பச்சை துண்டுக்கு கம்பீரமும் மரியாதையும் அளித்தவர் நாராயணசாமி.உழவர்களுக்கு இலவச மின்சாரம் அறிவித்தார் கலைஞர்
நாராயணசாமியின் கோரிக்கையில் இலவச மின்சாரம் அதை வழங்கியது திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி தான் என பேசிய முதல்வர் கடன் தள்ளுபடி , 3 வேளாண சட்டஙக்ளை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்தது திராவிட முன்னேற்ற கழக ஆட்சி.திராவிடர் முன்னேற்ற கழக ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டது.

வேளாண்மை பொறுத்தளவில் நாராயணசாமி நாயுடு கனவினை நிறைவேற்றியது கழக ஆட்சி
கோவைக்கு கழக ஆட்சி செய்த திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.கடந்த பத்து ஆண்டு காலத்தில் ஆட்சியில் இருந்த கட்சியால் சாதனைகளை சொல்ல முடியுமா? 8 மாத காலத்த்தில் கோவைக்காக பல திட்டஙக்ள் செய்யப்பட்டுள்ளது.வேறு ஆட்சியில் இவ்வாறு செய்யபப்ட்டுள்ளதா?இது ஸ்டாலினோட அரசு அல்ல உங்கள் அரசு போன ஆட்சியில் பணத்தை கொள்ளை அடித்தவரக்ளைத்தான் பார்த்திருப்பீர்கள்.

உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் சாலைகள் அமைக்கப்படும்.நீண்ட கால மேம்பால பணிகள் தேதி குறிப்பிட்டு முடிக்கப்படும்.குடிநீர் இணைப்பில் வெளிப்பட தனமை பின்பற்றப்படும்
தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசிடம் உரிமைகளை போராடி பெறுவதும் கழக ஆட்சிதான்.
நீட் தேர்வு பல லட்சம் செலவு செய்து பயிற்சி பெற்று மருத்துவராகலாம் ஆனால் இது அனைத்து மாணவர்ககளாலும் இயலாது.
ஆளுநரால் திருப்பி அனுப்பபட்ட மசோதா மீண்டும் 8 தேதி நிறைவேற்றப்படும்
அதிமுக அரசு அனுப்பிய மசோதா நிராகரிக்கப்பட்டது.அப்போது எதிர்கட்சி தலைவர் என்றடிப்படையில் கேள்வி கேட்டேன் ஆனால் எந்த தகவலும் வரவில்லை என அப்போதைய சட்ட அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.

ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதை மறைக்க நினைத்தார்கள்.அன்று நீட் மசோதாவை நிறைவேற்ற மறுத்தார்கள் படிப்பதற்கே தகுதி வேண்டும் என்பதே இந்த நீட் தான்
மருத்துவ படிப்புக்கு சேர்ந்தவர்கள் மருத்துவர்கள் ஆகிவிடமுடியாது.தேர்வில் வெற்றி பெற்றால்தான் முடியும்.நீட்டை மேலோட்டமாக பார்க்க கூடாது முகமூடியை கழற்றி பார்க்க வேண்டும்.நீட்டை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. ஜெயலலிதா நீட் தேர்வை எதிர்த்தார்.

அடிமை அரசு அதிமுக தலையாட்டி ஏற்றுக் கொண்டதன் விளைவுதான் இந்த பிரச்சனை நீட் மட்டுமல்ல தமிழ்நாட்டு விரோதமாக எது வந்தாலும் எதிர்ப்போம் அனுமதிக்க மாட்டோம்.
உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றால் கோட்டையில் நிறைவேற்ற கூடிய திட்டங்கள் அனைத்து கிரமாஙக்ளுக்கும் தெருக்களுக்கும் செல்லும்கழக கூட்டணி வெட்ட்பாளர்களுக்கு வாக்குகளை வாரி வழங்குங்கள் என தெரிவித்தார்.

முதல்வர் பேசுவதற்கு முன்பாக கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கவுரை ஆற்றினர்.

மேலும் படிக்க