February 10, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் திமுக தலைமையிலான கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும் என ராஜ வீதி பகுதியில் பிரச்சாரத்தின்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
81 வது வார்டு திமுக வேட்பாளர் மார்க்கெட் மனோகரனை ஆதரித்து ராஜ வீதி பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.அப்போது பேசிய அமைச்சர், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், நகை கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி என எண்ணற்ற சலுகைகளை அறிவித்த நமது முதல்வர், கோவையில் உள்ள மோசமான சாலைகளை புதுப்பிக்க 200 கோடியும், தெருவிளக்குகள் பராமரிக்க 20 கோடி ரூபாயும் முதற்கட்டமாக ஒதுக்கியவர் நம் முதல்வர் இன்னும் ஏராளமான திட்டங்களை நம் முதல்வர் செய்ய உள்ளார்.
நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் இன்று 18 வார்ட் முதல்வரின் ஆசியுடன் தேர்தல் பிரச்சாரப் பணிகளை துவக்கி உள்ளோம் செல்லும் இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து எங்கள் வாக்கு உதயசூரியனுக்கு என்பதை உறுதி செய்துள்ளனர்.
திமுக அரசின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளை வென்று கோவை மாநகராட்சியின் மேயர் என்ற பொறுப்பை ஏற்று சாதனை திட்டங்களை செயல் படுத்துவார்கள்.