• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் பார்வையாளர் நேரில் ஆய்வு

February 10, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் நிர்மலா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு நியமனம் செய்யப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வாக்குச்சாவடியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூராட்சிக்களுக்குட்பட்ட 44 -இடங்களில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு பீளமேடு பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி, கிழக்கு மற்றும் தெற்கு மண்டலத்திற்கு குனியமுத்தூர் ஆயூஷா மஹால், மேற்கு மண்டலத்திற்கு ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்திலும்,மத்திய மண்டலத்தில் நிர்மலா மகளிர் கலை அறிவியல் கல்லூரியிலும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம், மதுக்கரை நகராட்சிகளுக்கு அந்தந்த நகராட்சி அலுவலகத்திலும், காரமடை நகராட்சிக்கு லாரி உரிமையாளர்கள் சங்க திருமண்டபத்திலும், கருமத்தம்பட்டி நகராட்சிக்கு கத்தோலிக் தேவங்கர் திருமண்டபத்திலும், கூடலூர் நகராட்சிக்கு சாமிசெட்டிபாளையத்திலுள்ள லட்சுமி துரை திருமண மணடபம், பொள்ளாச்சி நகராட்சிக்கு எம்ஆர்சி மண்டபத்திலும், வால்பாறை நகராட்சிக்கு அரசு கலை அறிவியல் கல்லூரியிலும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

மேலும் மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சி பகுதிகளிலும் அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களுக்கு அருகில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

இப்பயிற்சி வகுப்பில் பங்குபெறும் அலுவலர்கள் அனைவருக்கும் வாக்குப்பதிவு மையத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து வித பணிகள் குறித்தும் வாக்குப்பதிவிற்கு முந்தைய நடைமுறை, வாக்குப்பதிவின்போது பின்பற்ற வேண்டிய விதிகள், வாக்குப்பதிவு தலைமை அலுவலர் பூர்த்தி செய்யவேண்டிய படிவங்கள், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து தேர்தல் பணியாற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை கோவை மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா நேரில் பார்வையிட்டு தேர்தல் பணியாற்றிடும் அலுவலர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்க அறிவுறுத்தியதோடு, மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைவருக்கும் போதிய தெளிவுரைகளை வழங்கவும் பயிற்றுனர்களுக்கு உத்தரவிட்டார்.

இவ்வாய்வின்போது மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க