February 10, 2022 தண்டோரா குழு
ஐசிஐசிஐ வங்கி ‘இன்ஸ்டாபிஸ்’ செயலியை உருவாக்கியுள்ளது. அதன் வணிக வங்கி மொபைல் செயலியின் பயன்பாட்டை பிற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் உள்பட அனைத்து வர்த்தகர்களும் கிடைக்க செய்யும் வகையில் உருவாக்கியுள்ளது.
முதன்முறையாக இந்த முயற்சியானது வர்த்தகர்களான,பலசரக்கு கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள்,உணவங்கள்,எழுதுபொருள்கள் விற்பனை கடைகள்,மருந்தகங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மற்றும் தொழில் முறை வல்லுநர்களான டாக்டர்கள், வக்கீல்கள் ஆகியோர் டிஜிட்டல் முறையில் பணம் வசூலிப்பதற்காக உடனடியாக யுபிஐ ஐடி மற்றும் க்யூஆர் கோடு ஆகியவற்றை உருவாக்கி, தங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து உடனடியாக பணம் வசூலிக்கும் செயல்முறையை தொடங்கலாம்.
மேலும் அவர்கள் பாயின்ட் ஆப் சேல் சாதனங்களுக்காகவும் டிஜிட்டல் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். வெறும் 30 நிமிடங்களுக்குள் தங்களது நேரடி கடைகளை ஆன்லைன் ஸ்டோர்களாகவும் மாற்றிக் கொள்ளலாம்.பணம் செலுத்தியதை உறுதி செய்யும் குரல்வழி செய்தி சாதனங்களுக்காகவும் விண்ணப்பிக்கலாம்.
ஐசிஐசிஐ வங்கியில் நடப்பு அல்லது சேமிப்பு கணக்கு வைத்திருந்தாலும் இல்லாவிட்டாலும், எந்தவொரு வர்த்தகரும் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து இந்த ‘இன்ஸ்டாபிஸ்’ செயலியை எளிதாக தரவிறக்கம் செய்து தங்களுக்கு தேவையான வர்த்தக தீர்வுகளை பெற இயலும்.இந்த முன்னெடுப்பின் சிறப்பம்சம் என்னவென்றால் இம்முயற்சியானது முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பம் அடிப்படையிலான, உடனடியாக உங்களது வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் செயல்முறையை கொண்டுள்ளது.
இதற்காக வர்த்தகர்கள் எந்தவொரு கிளைக்கும் செல்லவோ அல்லது ஏதேனும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யவோ வேண்டிய அவசியம் இல்லை.கேஓய்சி இன் சரிபார்ப்புக்கு தேவையான பான் மற்றும் ஆதார் எண்ணை உடனடியாகவும் டிஜிட்டல் ரீதியாகவும் சரிபார்க்கும் வங்கியின் மேம்பட்ட எபிஐ களை மேம்படுத்த இந்த முன்முயற்சிகள் உதவுகிறது.
இந்த முன்முயற்சி குறித்து ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குநர் அனுப் பக்சி கூறுகையில்,
“ஐசிஐசிஐ வங்கியில் நாங்கள் எப்போதும் சுய தொழில் செய்பவர்கள், சிறுகுறுநடுத்தர தொழில் பிரிவினர்தான் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளனர் என நாங்கள் நம்புகிறோம். இந்த பிரிவின் பெரும்பகுதியினர் சில்லரை வர்த்தகங்களில் ஈடுபடுகின்றனர். நாடு முழுவதும் சுமார் 2 கோடி வர்த்தகர்களுக்கு அவர்களது வணிகத்தை எளிதாக்கும் தீர்வுகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது எங்கள் முயற்சியாகும். இந்த லட்சியத்துடன், நாங்கள் முதல்முறையாக ‘இன்ஸ்டாபிஸ்’ என்ற, வர்த்தகர்களுக்கான மொபைல் செயலியை, இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தோம்.
எங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகள் எங்களது வாடிக்கையாளர்களுடன் மட்டும் முடிந்துவிடக் கூடாது என்று நாங்கள் நம்புகிறோம்; மற்ற வங்கி வாடிக்கையாளர்களுக்கும் அவை கிடைக்க வேண்டும்.எங்களது டிஜிட்டல் வங்கி இணையதளங்களின் ‘திறந்த கட்டுமானம்’ என்ற இந்த கொள்கைக்கு ஏற்ப, தனிப்பட்ட வங்கி பயன்பாட்டுக்கான ஐமொபைல்பே மொபைல் செயலியை, அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கடந்தாண்டு அறிமுகம் செய்தோம். இந்த தொழில் துறையில் அந்த முயற்சிதான் இது போன்ற முதன்முறையான முயற்சியாகும். அதே போல நாட்டின் எந்தவொரு வங்கியிலும் கணக்கு வைத்திருக்கும் வர்த்தகர்களுக்கு ‘இன்ஸ்டாபிஸ்’ செயலியின் எளிமை, வேகம், மற்றும் பாதுகாப்பை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதுவும் இத் தொழில்துறையில் மற்றுமொரு முதல் முயற்சியாகும். இப்போது இந்தியாவில் உள்ள எந்தவொரு வங்கியிலும் கணக்கு வைத்திருக்கும் எந்தவொரு வர்த்தகரும் ‘இன்ஸ்டாபிஸ்’ மூலமாக டிஜிட்டல் பண வசூல் சேவையை உடனடியாக பெற இயலும்.
மேலும் உடனடியாக தனது வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை வசூலிக்கத் தொடங்கலாம். வங்கியின் கிளைக்கு செல்லாமலும், காகிதமற்ற முறையிலும் வர்த்தகர்கள் தங்களது கேஒய்சி செயல்முறையை டிஜிட்டல் முறையில் செய்து கொள்வதற்கான பயனையும் பெறுகின்றனர். இந்த புதிய தனித்துவமான டிஜிட்டல் சலுகையானது நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்களிடம் எதிரொலிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் இது அவர்களின் இறுக்கத்தை பெரிய அளவில் தளர்த்துகிறது. இது அவர்கள் தங்களின் முக்கிய வணிகத்தை வளர்ப்பதற்கு பயன்படுத்த முடியும்” என்றார்.