February 12, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன.இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 50 வார்டுகள் பெண்களுக்கும், 50 வார்டுகள் ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 8, மேற்கு மண்டலத்தில் 11, தெற்கு மண்டலத்தில் 4, வடக்கு மண்டலத்தில் 14, மத்திய மண்டலத்தில் 13 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பொதுப்பிரிவிலும் பெண்கள் போட்டியிடுகின்றனர்.
அதன்படி, மொத்தமாக 372 பெண் வேட்பாளர்கள் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர். வடக்கு மண்டலத்தில் அதிகபட்சமாக 95 பெண்கள் வேட்பாளர்களாக உள்ளனர்.