February 14, 2022
தண்டோரா குழு
கோவை கோவில்மேடு கே.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (48).இவர் கொலை வழக்கில் கைதாகி கடந்த செப்டம்பர் மாதம் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
இவர் கடந்த 20 ஆண்டுகளாக ரத்த அழுத்தம் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சிறை மருத்துவர்கள் முதலுதவி அளித்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் இறந்ததாக தெரிவித்தனர். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.