February 16, 2022
தண்டோரா குழு
கோவையில் நள்ளிரவில் வீட்டில் புகுந்து தங்கம், வைரத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை நியூசித்தாபுதூர் பாலசுந்தரம் லே-அவுட்டை சேர்ந்தவர் பாபு(43). சொந்த தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மாடியில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். கீழ் தளத்தில் உள்ள அறையில் அவரது அம்மா இருந்தார். அவர் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கியதாக தெரிகிறது.
அப்போது நள்ளிரவில் நைசாக உள்ளே புகுந்த மர்ம நபர் 1 பவுன் தங்கம், 10 கிராம் வைரம், ஒரு வாட்ச் மற்றும் ரூ.4 ஆயிரத்தை திருடி கொண்டு சென்றுள்ளார். மறுநாள் காலையில் வீட்டில் திருடு போயிருப்பதை கண்டு பாபு அதிர்ச்சியடைந்தார். அவர் உடனே இது குறித்து காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கம், வைர நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.