February 16, 2022
தண்டோரா குழு
ராமநாதபுரம் மாவட்டம் இடையன்குளத்தை சேர்ந்தவர் கார்த்திக்(22). இவர் கோவை சிங்காநல்லூரில் தங்கியிருந்து ஒரு கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று கார்த்திக் தனது நண்பர் அஜித் என்பவருடன் சிங்காந்ல்லூர் எஸ்.ஐ.எச்.எச் காலனியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றனர்.பின்னர் மது அருந்தி விட்டு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த வாலிபர் ஒருவர் அவர்களை வழிமறித்தார்.
பின்னர் அவர்களிடம் செல்போனை கேட்டு மிரட்டினார். கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசி கார்த்திக்கை கற்களால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். அக்கம்பக்கத்தினர் காயமடைந்த கார்த்திக்கை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் செல்போன் கேட்டு தாக்கியது சரவணன் என்பது தெரியவந்துள்ளது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.