• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹிஜாப் விவகாரத்திற்கு பின்னர் ஒரே ஒரு கட்சி மட்டுமே இருக்கிறது – கமல்ஹாசன்

February 16, 2022 தண்டோரா குழு

மேயராவது தன் நோக்கமல்ல என்றும், கட்சியின் தலைவராக இருந்து கொள்கிறேன் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாஜ் விவண்டா நட்சத்திர விடுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்த கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

9 மாத திமுக ஆட்சியில் இதுவரை மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், தேர்தல் வந்தால் 2 கழகங்களும் வாக்குறுதிகளை அள்ளிவீசிவிட்டு தேர்தல் முடிந்தவுடன் குப்பை போல் வீசி விடுகிறார்கள் எனவும் விமர்சித்தார்.ஊழலுக்கும் ஊழலுக்கும் தான் தற்போது போட்டி என குறிப்பிட்ட அவர், மக்கள் சார்பு நிலையை எடுக்க கூடாது எனவும் மய்யமாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

இது மக்களுக்கு சொல்லும் அறிவுரை அல்ல எனவும் தனக்கும் தனது கட்சியினருக்குமான அறிவுரையாகவே பார்க்கிறேன் எனவும் கூறிய அவர், தன்னை பாஜகவின் பி டீம் என்கிறார்கள் எனவும் மோடி வென்றாலும் தோற்றாலும் தனக்கு கவலையில்லை எனவும் அது தன் நோக்கம் அல்ல எனவும் குறிப்பிட்டார். மோடி வந்துவிடுவார் என்கிறார்கள் எனக்கூறிய அவர் பிரதமராக உள்ளவர் எப்படி கவுன்சிலராவார் எனவும் நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.

தங்கள் கட்சியினர் வென்றால் கிராம சபை கூட்டங்களை போல், நகரங்களில் வார்டு சபை, ஏரியா சபை கூட்டங்கள் நடத்தப்படும் என உறுதிமொழி கொடுத்து தங்கள் வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள் எனவும் நீட்டை ஒழிப்பேன் என்றவர்கள் நீட்டிற்கு வகுப்பு நடத்துவேன் என பிரச்சாரம் செய்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

நியாயமான தேர்தல் இதுவரை நடைபெற்றுள்ளது என நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய அவர், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு மேயராவது தனது நோக்கமல்ல எனவும் தான் தலைவராக மட்டுமே இருப்பேன் எனவும் தெரிவித்தார். ஹிஜாப் விவகாரத்திற்கு பின்னர் ஒரே ஒரு கட்சி மட்டுமே இருக்கிறது எனவும் பிற கட்சிகள் அதை பிரச்னையாக பார்க்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

கோவையில் பல இடங்களுக்கு தேர்தலுக்கு பின்னர் மநீம கட்சியினர் சென்று பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் எனவும் அங்கு தங்களின் கால்தடம் பதிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நகர்புற தேர்தலில் மநீமவிற்கு கிடைக்கும் ஒவ்வொரு ஓட்டிற்கும் 5 ஆண்டுகளில் ஒரு மரக்கன்று வழங்கப்படும் என்ற திட்டத்தை துவக்கி வைத்து நந்தினி என்ற கர்ப்பிணிக்கு மரக்கன்று வழங்கினார்.

மேலும் படிக்க