• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இன்னும் எத்தனை நாட்கள் தான் மக்களை ஏமாற்றுவார்கள் – கோவையில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்

February 17, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தற்போதுள்ள அமைச்சரும் பணத்தில் தான் போட்டி போடுகிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் கொண்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

மக்கள் அனைவரும் தேமுதிகவிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக் கொண்டார். கேப்டன் விஜயகாந்த் கடந்த 40 ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்தவர் என தெரிவித்தார்.இன்று பணபலம் அதிகாரபலம் ஆட்சி பலம் என பலகை உள்ளது.கோவை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தற்பொழுதுள்ள அமைச்சரும் 2000, 4000 என பணத்தில் தான் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்களே தவிர மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறார்களா என்றால் அதற்கு பதில் இல்லை என தெரிவித்தார்.

டிபன் பாக்ஸ் கொடுப்பது அதற்குள் பணம் வைத்துக் கொடுப்பது என்று மக்களை ஏமாற்றி வருகிறார்கள் இன்னும் எத்தனை நாட்கள் தான் மக்களை ஏமாற்றுவார்கள்.இங்கு நல்ல சாலை வசதி இல்லை ஆனால் ஓட்டுக்கு காசு கொடுக்கும் போது மட்டும் முன்னாள் வந்து நிற்கிறார்கள் எனவும் விமர்சித்தார்.ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை தான் இவர்கள் ஊக்கப் படுத்துகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

கடந்த 50 ஆண்டுகளாக திமுகவும் அதிமுகவும் தான் தமிழகத்தை ஆட்சி செய்தது ஆனால் முன்னேற்றம் என்பது இல்லை என தெரிவித்த அவர் பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டனர் எனவும் தெரிவித்தார்.ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் நல்லவர்கள் பக்கம் தான் மக்கள் நிற்பார்கள் எனவும் தெரிவித்தார். மக்களின் வறுமையை பயன்படுத்தி பணம் கொடுத்து வாக்குகளை சேகரிப்பதாகவும் தெரிவித்தார்.

தற்பொழுது மக்களின் எஜமானர்கள் எங்களின் வேட்பாளர்களை கேப்டன் நேரடியாக வந்து நிற்பது போல் நினைத்துக் கொண்டு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

பிரச்சாரத்தின் பொழுது 85 வது வார்டு அவைத்தலைவரின் குழந்தைக்கு சம்யுக்தா என பெயர் சூட்டினார்.மேலும் யாரும் பயப்பட வேண்டாம் எனவும் தொடர்ந்து உழைத்தால் அதற்கான பலனும் கிடைக்கும் எனவும் வேட்பாளர்கள் வெற்றி பெற்று தலைமை செயலகத்திற்கு வந்து தலைவரைச் சந்திக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தேமுதிக தொண்டர்கள் அவருக்கு பொன்னாடை களை வழங்கினர் அதனை பிரச்சார வாகனத்தில் இருந்த படியே பெற்றுக்கொண்டார்.

மேலும் படிக்க