• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக ஆட்சி வந்த பின்பு தான் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது -கோவையில் அண்ணாமலை பிரச்சாரம்

February 17, 2022 தண்டோரா குழு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று பல்வேறு கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் பகுதி வெள்ளகிணரில் இரண்டாவது வார்டு பாஜக வேட்பாளர் வத்சலா வை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது மக்களிடம் பேசிய அவர்,

மத்திய அரசின் திட்டங்கள் தங்கள் பகுதிக்கு வர வேண்டும் என்றால் பாஜக வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார். இப்பகுதியில் தெருவிளக்கு பிரச்சினை அதிகமாக உள்ளதாக கூறிய அவர் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால் உடனடியாக அனைத்து தெருக்களுக்கும் தெருவிளக்குகள் போட்டு தரப்படும் என தெரிவித்தார்.

பட்ஜெட்டில் பணம் ஒதுக்காமலும் அரசாணை இல்லாமலும் முதல்வர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருவதாகவும் தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் இருந்து திமுக குழு ஒன்று கோவைக்கு வந்து கொலுசுகளை வழங்கி வருவதாக தெரிவித்தார். அந்தக் கொலுசை ஆய்வு செய்தபோது அதில் 16 சதவிகிதம் தான் வெள்ளி உள்ளதாக தெரிவித்தார்.

சட்டமன்றத் தேர்தலின் பொழுது எப்படி காதில் பூ சுற்றினார்களோ அதேபோன்று தற்பொழுது வந்துள்ளதாக மல்லிகைப்பூவை காண்பித்தார். அதேபோன்று இப்பகுதிக்கு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி வேண்டும் என்றால் அதற்கு இங்கு பாஜக நிர்வாகி இருந்தால்தான் முடியும் எனவும் மத்திய அரசின் திட்டங்களை எங்கு செயல்படுத்தவும் பாஜக நிர்வாகி வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மேலும் பிரதமர் முன் களப் பணியாளர்களின் காலில் விழுந்து வணங்குபவர் எனவும் கோவில்களை காக்க பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது பாஜக எனவும் ஆகவே பாஜகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அவர் பேசும்பொழுது திமுக வாகனங்களை அருகில் விடவேண்டாம் எனவும் கூறினார்.

மேலும் அவர் திமுகவை குற்றம் சாட்டுவது அவ்வப்போது மைக் வேலை செய்யாமல் போனது அங்குள்ள மக்களை சிரிப்படையச் செய்தது.

மேலும் படிக்க