February 17, 2022 தண்டோரா குழு
வார்டு பகுதிகளில் சாலை வசதி, குடிநீர்,சுகாதாரம் போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் கூடுதல் கவனம் செலுத்துவேன் என 54 வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடும் நீலவேணி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இம்முறை சில கட்சிகள் தனியாக தேர்தலை சந்தித்து,வரும் நிலையில் சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் போட்டியிடுகின்றனர்.
அந்த வகையில்,கோவை நீலிக்கோணம்பாளையம் பகுதியில் தென்னை மரம் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக நீலவேணி செல்வராஜ்.அதே பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் இவர்,வார்டு பகுதிகளில் உள்ள மக்களிடையே நன்கு அறிமுகமானவர் .இந்நிலையில் 54 வார்டு பகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கி தீவிர பிரச்சாரம் செய்து வரும், இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய இவர்,
அரசியல்,சாதி,மதம்,கட்சி பாகுபடின்றி இந்த பகுதி மக்களின் ஆதரவோடு மக்கள் சுயேட்சை வேட்பாளராக தாம் போட்டியிடுவதாகவும், மக்களின் ஆதரவு தமக்கு பெருகி வருவதாக கூறிய இவர்,வார்டில், சுகாதார சீர்கேடு,குடிநீர் பற்றாக்குறை என பல்வேறு பிரச்னைகள் இருப்பதால், தாம் வெற்றி பெற்றால் இவை அனைத்திற்கும் தீர்வு காண்பேன் என உறுதியளித்தார்.