February 18, 2022
தண்டோரா குழு
கோவை மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர்கள் சீனிவாசன் மற்றும் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடக்கிறது.தேர்தல் நடக்கும் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், அதில் பணி புரியும் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் ஒரு நாள் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி கோவை மாவட்டத்தில் தேர்தல் நடக்கும் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து தொழிற்சாலை நிர்வாகிகளும் தங்களது தொழிற்சாலைகளில் பணி புரியும் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாள் அன்று ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.