February 18, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக 17 பறக்கும் படைகள் அமைத்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 86 பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் 41 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் நடத்தை விதிகள் மீறல் மற்றும் அவை தொடர்பான புகார்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பணம் அல்லது பொருட்களாக
விநியோகம் செய்யப்படுவது தொடர்பான புகார்கள் ஆகியவற்றை கண்காணிக்கும் பொருட்டு கோவை மாவட்டத்தில் 69 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 24 மணி
நேரமும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
தற்போது நடத்தை விதிகள் மீறல் மற்றும் அவை தொடர்பான புகார்கள் கூடுதலாக வருவதால் கோவை மாநகராட்சிக்கு 10 பறக்கும் படைகளும், நகராட்சி பகுதிகளுக்கு 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு மொத்தம் 86 பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.