February 19, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் 169 பதட்டமான வாக்குச்சாவடிகளின் கண்காணிப்பு கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து வாக்குச்சாவடிகளும் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.
இதனை கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் கோவிந்த ராவ், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் கண்காணிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்கள்.
பின்னர் ஆட்சியர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை மாநகராட்சியில் உள்ள 1,290 வாக்குச்சாவடிகளில், 169 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கருதப்பட்டு நேரலை மூலமாக கண்காணிக்கப்பட்டது. தேர்தல் பார்வையாளர் கோவிந்த ராவ், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டோம்.எந்த வாக்குச்சாவடிகளிலும் பத்தற்றமான சூழ்நிலைகளோ,பிரச்சனைகளோ எதுவும் இல்லை. எந்தவித பிரச்சனையும் இல்லாமல் கோவையில் வாக்குப்பதிவு நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.