• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமிதாப்பச்சனை மீண்டும் சீண்டி பார்க்கும் பிளின்டாப்.

March 31, 2016 முகமது ஆஷிக்

T2௦ உலகக்கோப்பையில் இன்று இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள் அணியுடன் அரையிறுதியில் மோதவுள்ளது. இதற்கு முன்பு நடந்த சூப்பர் 1௦ ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வெற்றி வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. அப்போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு உலகில் உள்ள பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதைப் போன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் கோலிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். ஆனால் இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரோ பிளின்டாப் கோஹ்லியை மட்டம் தட்டும் வகையில் ஒரு டிவிட் போட்டிருந்தார். அதில் “கோஹ்லி இது போல் தொடர்ந்து விளையாடினால் ஒருநாள் ஜோ ரூட்டுக்கு நிகராக வந்துவிடுவார்” என்று ஒரு டிவிட்டில் குறிப்பிட்டு இருந்தார். பிளிண்டாபின் ட்வீட்டை பார்த்த அமிதாப்பச்சன் உடனே “ஜோ ரூட்டா யாரது? ஒருவேளை இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சந்தித்தால் இந்தியா அவரை வேரோடு பிடுங்கிவிடும் (அப்ரூட்)” என்று,பிளின்டாப்பின் டிவிட்டர் பக்கத்தை இணைத்து, மறுடிவிட் செய்தார்.
ஆனால் ப்ளிண்டாப் மீண்டும் நக்கலாக “ மன்னிக்கவும் யார் அது அமிதாப் “ என்று அமிதாப்பச்சனுக்கு ட்விட் செய்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து அணி எளிமையாக வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது. இதையெடுத்து பிளிண்டாப் தனது ட்வீட்டர் பக்கத்தில் அவரது நண்பன் ஒருவருக்குப் பதில் அளிக்கும் வகையில் நாம் இறுதி போட்டியை பார்க்கப் போகலாம், என் நண்பர் அமிதாப்பச்சன் நம் இருவருக்கும் டிக்கெட் வாங்கித் தருவார் என்று பதிவு செய்திருந்தார். ஆனால் அடுத்த பதிவில் அதற்கு முதலில் இந்தியா இறுதிபோட்டிக்கு வரவேண்டும், எனவும் கிரிஸ் கெயில் இருக்கிறார் அவர் இந்தியாவை பார்த்துக்கொள்வார் என்று பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து அதற்குப் பதில் தரும் விதமாக, கிரிஸ் கெயிலின் புயல் இந்தியாவுடன் வீசாது என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளிண்டாப் அமிதாப்பச்சன் டிவிட்டரில் மோதியது பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அமிதாப்பச்சனை மீண்டும் பிளிண்டாப் வம்புக்கு இழுத்தது அமிதாப் ராசிகளுக்கு கடுங்கோபத்தை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க