• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கம் – மாவட்ட ஆட்சியர்

February 21, 2022 தண்டோரா குழு

நாளை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கம்- அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வர அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன்,

கோவை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை பொறுத்தவரை மாநகராட்சிக்கு 1 மையம், 7 நகராட்சிகளுக்கு 7 மையங்கள், 33 பேரூராட்சிகளுக்கு 9 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சியில் 100 வார்டு உறுப்பினர்கள் நகராட்சியில் 198 வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சியில் 504 வார்டு உறுப்பினர்கள் (போட்டியின்றி தேர்வு பெற்றவர்களை தவிர்த்து) எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது.

இதற்காக கோவை மாவட்டத்தில் 497 வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு மையத்திற்கும் 3 நுண் பார்வையாளர்கள் வீதம் 150 நுண் பார்வையாளர் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் மாநகராட்சியில் 2400 காவலர்கள் நகராட்சி மற்றும் பேரூராட்சியை சேர்த்து 1460 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதைத்தவிர வாக்கு எண்ணிக்கை மையத்தில் சுற்றிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளருடன் 3 முகவர்கள் அனுமதிக்கப்படுவர் அவர்கள் செல்போன் எடுத்து வர அனுமதி இல்லை.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் வர அனுமதி இல்லை. மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு மதுக்கடைகள் செயல்படவும் அனுமதி இல்லை. வாக்கு எண்ணிக்கை மையத்தில் கூறிவரும் நிலையில் முக கவசம் அணிவது சமூக இடைவெளியை நம்பக் கூடாது என அனைத்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம்.

பணப்பட்டுவாடா குறித்து நேற்று முன்தினம் வரை 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.செய்தியாளர் சந்திப்பின் பொழுது கோவை மாவட்டத்திற்கு தேர்தல் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்ட நாகராஜன், மற்றும் பார்வையாளர் கோவிந்த ராவ் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க